வழி வழி பாரதி

Publisher:
Author:

350.00

வழி வழி பாரதி
வழி வழி பாரதி

350.00

Vazhi Vazhi Bharathi

இந்நூலில் பாரதி பாடல்கள் சங்கப்பாடல்களுடன் ஒப்புநோக்கப்பட்டுள்ளன. பாரதியின் வரலாறு திரிபின்றிக் கூறப்பட்டுள்ளது. மகாகவியின் பாடல்களும் பிற படைப்புகளும் சுருக்கமாக, ஆனால் ஆழமாகத் திறனாய்வு செய்யப்பட்டுள்ளன. பாரதியின் சமயக் கொள்கை தெளிவுறுத்தப்பட்டுள்ளது. வேதங்களும் உபநிஷதங்களும் சைவ சித்தாந்தமும் மகாகவியின் உள்ளத்தில் ஆழ்ந்து விளங்கியமை விளக்கப்படுகின்றது. பாரதியின் ஆக்கங்களின் மறைபொருள்கள் துலக்கப்பட்டுள்ளன. பாரதியின் நகைச்சுவைச் சிறப்பு சித்திரிக்கப்பட்டுள்ளது. பாட வேறுபாடுகள், பதிப்புப் பிழைகள், அவற்றால் விளையும் விபரீதங்கள் ஆகியன ஆதாரத்தோடு காட்டப்பட்டுள்ளன. ஷெல்லி, புஷ்கின் மில்டன், ப்ரௌனிங், ஃரான்ஸிஸ் தாம்ஸன் ஆகிய மேனாட்டுக் கவிஞர்கள், பாரசீகக் கவி ஜலாலுதீன் ரூமி ஆகியோரின் ஆக்கங்களுடன் பாரதியின் படைப்புகள் வியப்பூட்டும் விதத்தில் ஒப்புக்காட்டப்படுகின்றன. “மேலோர் சிந்தை மாறா(து) ஒன்றும்” என்பதை இது நிறுவுகிறது. மொத்தத்தில், பாரதி நம் நாட்டு இலக்கிய, ஆன்மிக மரபின் வழி வழி வந்த பாதையில் ராஜநடையிட்டு புதிய இலக்கியம் படைத்த பெற்றி இதில் விளக்கப்படுகின்றது.

Delivery: Items will be delivered within 2-7 days