வெர்ரியர் எல்வினும் அவரது பழங்குடிகளும்

Publisher:
Author:

Original price was: ₹575.00.Current price is: ₹530.00.

வெர்ரியர் எல்வினும் அவரது பழங்குடிகளும்

Original price was: ₹575.00.Current price is: ₹530.00.

Verriyar Elvinum Avarathu Pazankudikalum
Ramachandra Guha

 

இந்தியப் பழங்குடிகள் குறித்த ஆய்வாளராகவும் அம்மக்களின் சமூக சேவகராகவும், அவர்களது மேம்பாட்டுக்கான உயர் அரசு அதிகாரியாகவும் பணியாற்றியவர் வெர்ரியர் எல்வின். கிறித்தவ மதபோதகரின் மகனாக இங்கிலாந்தில் பிறந்து ஆக்ஸ்போர்டில் பயின்று, இந்தியப் பழங்குடிகளிடம் கிறித்தவ மறை பரப்பாளராக வந்து, காந்தியவாதியாக மாறி தம் மறைபரப்பும் பணியைத் துறந்தவர். ஆதிவாசிப் பெண்ணைத் திருமணம் செய்து புத்தசமயத்தைத் தழுவி இந்தியக் குடியுரிமையைப் பெற்றுக்கொண்டவர். போராட்டம் மிகுந்த இவரது வாழ்க்கை வரலாறே இந்நூல். நூலாசிரியர் ராமசந்திர குஹா இந்தியாவின் தலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவர். நூலின் சுவை குன்றாதவாறு வேலு. இராஜகோபால் இதைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். எல்வினின் சுயசரிதை, அவரது நாட்குறிப்புகள், நூல்கள் ஆய்வுக்கட்டுரைகள், அவருடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தோரிடம் கேட்டறிந்த செய்திகள் என்பனவற்றின் துணையுடன் இந்நூலை நூலாசிரியர் எழுதியுள்ளார். வாழ்க்கை வரலாறு எழுதப்புகுவோருக்கு முன்னோடியான நூலாக இது அமையும்.

_ ஆ.சிவசுப்பிரமணியன்

Delivery: Items will be delivered within 2-7 days