Vidai
தில்லையின் கவிதைகள், ஆழமான பரப்பிலிருந்து உருவெடுத்து வருகின்றன, உடலை அயராது பிம்பங்களாக்குகின்றன. தான் வதையுறும் அரசியல் சிந்தனையையும், தன் நிகழ்கால வாழ்வையும் பிணைக்கும் சித்திரங்களை மெல்லிய கீற்றாக வரைந்து செல்கின்றன. எப்பொழுதும் தன்னை தான் வந்த நிலத்தின் அரசியலுடனும் தன் பெண்ணியச் சிந்தனையுடனும் தீவிரமாகப் பிணைத்துக் கொண்டு உருவாகின்றன.
தில்லை, எழுச்சியும் துவளலும் ஒரே சமயத்தில் குரல் பெறுகின்றனவோ என்று தோன்றும் அளவிற்கு எடுத்துக் கொண்ட பொருளுடன் சொற்கள் வழியாகவும் தன்னைக் கோர்த்துக் கொள்பவர். குறைந்த சொற்களால் ஆழமான விஷயங்களை நேரடியாகச் சொல்கிறார். கவிதைக்கான சொற்கட்டுமானம் தளர்ந்திருந்தாலும் எடுத்துக்கொண்ட ஆழமான விஷயங்களால் அந்தத்தளர்ச்சியை வாசிப்பிற்க்குப் பின் மறக்கச் செய்கிறார்.
– கவிஞர் குட்டிரேவதி

கிறித்தவமும் தமிழ்ச் சூழலும் 


Reviews
There are no reviews yet.