45 அரிய முதல்பெண்களின் வாழ்க்கைக் கதை. மதராஸ் மாகானமாக அறியப்பட்ட தென்னிந்தியாவில் முதன் முதலில் பல துறைகளில் காலடி எடுத்துவைத்த முன்னோடிப் பெண்களைப் பற்றிய கட்டுரைத் தொகுப்பு. முதல் சட்டமன்ற உறுப்பினர் முதல் முதல் பொறியாளர் வரை இதில் இருக்கும் பெண்கள் உங்களை ஆச்சரியத்திலும் உற்சாகத்திலும் ஆழ்த்துவார்கள். நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான பெண்களின் வரலாறு.
முதல் பெண்கள்
Publisher: மைத்ரி புக்ஸ் Author: நிவேதிதா லூயிஸ்₹210.00
பெண்களின் வரலாறு பெரும்பாலும் மறைக்கப்படுகிறது அல்லது புறக்கணிக்கப்படுகிறது. ஆணாதிக்கம் கோலோச்சிய காலத்தில் அடிமைத்தளையை அறுத்துக்கொண்டு வெளியேறுவதே பெண்களுக்கு மாபெரும் சாதனையாக இருந்தது. அதிலும் தனித் திறமையால் தேர்ந்தெடுத்த துறைகளில் சாதித்த 45 பெண்கள் குறித்த தொகுப்பு இந்நூல். அரசியல், சமூகம், பொருளாதாரம் என நாட்டைக் கட்டமைக்கும் அனைத்திலும் பெண்கள் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. முதல் அடியை எடுத்துவைக்கிறவர்களுக்குச் சமூகம் மலர்ப்பாதையை அமைத்துக் கொடுப்பதில்லை. சோதனைகள் பலவற்றைக் கடந்துதான் அவர்கள் சாதிக்க வேண்டியிருக்கிறது. இந்நூலில் இடம்பெற்ற கட்டுரைகளும் அதைத்தான் உணர்த்துகின்றன.
நன்றி – தமிழ் இந்து
Delivery: Items will be delivered within 2-7 days
Arunthathi ravishankar –
புத்தகம்: முதல் பெண்கள்
ஆசிரியர் :நிவேதிதா லூயிஸ்
பல்வேறு துறைகளில் சாதித்த முதல் பெண்களைப் பற்றிய 43 கட்டுரைகள் அடங்கிய புத்தகம்.
நீலகிரி மாவட்ட படுகர் இன பெண் அக்கம்மாவில் தொடங்குகிறது முதல் கட்டுரை. சமீபத்தில் நீலகிரியின் பூர்வீக குடிமக்கள் என்ற சிறப்பு அந்தஸ்து பெற்ற படுகர் இனத்தில் இன்றும் பல கட்டுப்பாடுகள் (பெண்ணுக்கு) காணப்படுகிறது (மருமகளான ஊரில் சேலை மட்டுமே அணிய வேண்டும்!! மாதவிலக்கு நாட்களில் தனியே அல்லது அம்மா வீட்டில் இருக்க வேண்டும்!! திருமணமான பெண்கள் வெள்ளை நிற போர்வையை போர்த்தி இருக்க வேண்டும்)அக்கம்மா வாழ்ந்த காலத்தில் மிக கடுமையான கட்டுப்பாடுகள் இருந்திருக்கும்.முதல் பெண் படுகர் இன நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலையை அடைய அவர் பல போராட்டங்களை சந்திக்க வேண்டி இருந்திருக்கும். இருப்பினும் அவர் பெற்ற வெற்றிக்கு காரணம் கல்வி.
வைரத் தோடுக்கு பதிலாக என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா புத்தகத்தை பரிசாக கேட்டதோடு காந்தி கொள்கையால் ஈர்க்கப்பட்டு எட்டு வயது முதல் கதராடை அணிந்த அன்னாமானி.
மழைநாளில் தவித்த நாய்க்குட்டிகளுக்கு அடைக்கலம் தந்து அதன் தொடர்ச்சியாக “புளுகிராஸ்” அமைப்பு உருவாக்கிய முதல் பெண் விமானி உஷா சுந்தரம்.
துருக்கியிலிருந்து இந்தியா வந்து முதல் பெண் இஸ்லாமிய கௌரவ நீதிபதியாக கதீஜா யாகூப் ஹாசன்.( கொசுறு கணவரின் பெயர் ஹாசன் ) கிலாபத் இயக்கம் போராட்டத்தில் சிறை சென்றபோது நண்பரான சீனிவாசன் இவர் மேல் கொண்ட அன்பால் தன் மகன்கள் பெயரோடு ஹாசன்(சாருஹாசன், கமலஹாசன் ) என்பதை இணைத்ததாக தகவல்).
ஆண்களின் ஆதிக்கம் நிறைந்திருந்த காலத்தில் முதல் பெண் துப்பறியும் நாவல் எழுத்தாளர் ஆக கோல் ஊன்றிய வை. மு. கோதைநாயகி.
பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இந்தித் திணிப்புக்கு எதிரான முதல் எதிர்ப்புக் குரலை பதிவு செய்த முதல் தமிழ் பெண் அமைச்சர் சத்தியவாணிமுத்து.
இலவச மதிய உணவு திட்டத்திற்கு முன்னோடியாக திகழ்ந்த பத்மபூஷன் தாரா செரியன்.
லண்டனில் உள்ள மக்னோலியா விசுலே பார்க்கில் “கோபஸ்ட் ஜானகி அம்மாள்” என பெயரிடப்பட்ட மலர்கள் இன்றும் உள்ளன. இதற்கு காரணமாக அமைந்தது இடவேலத் கக்கத் ஜானகி அம்மாள்.
அத்தனை பேரும் இந்திய பெண்கள். ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான பெண் சாதனையாளர்களுக்கு மிகப்பெரிய பின்புலம் என்று எதுவும் இல்லை. குறிப்பிட்ட சாதியினரும் மதத்தினரும் மட்டும் சாதிக்கவில்லை. கணவனை இழந்த பெண், திருமணமாகாத பெண், கணவனின் துணையோடு வென்ற பெண் என பல பெண்களை பற்றி அறிய இப்புத்தகத்தை படிக்கலாம்.
அவர்களின் சாதனைக்கு காரணம் ஆனது ஒன்று கல்வி மட்டுமே.
#பெண்கல்வி