PAYANA SARITHTHIRAM
பயண சரித்திரம்
உலகம் தட்டையானது என்ற மனிதனின் அறியாமையைப் பயணங்களே தகர்த்தெறிந்தன.
கண்ணுக்கெட்டிய தொலைவோடு கடலும், உலகின் எல்லையும் முடிகிறது என்றே நம்பிக்கொண்டிருந்தான் ஆதிமனிதன். கண்ணுக்கு கரை தெரியும் தூரத்தில் பாதுகாப்பாகவே அன்றைய கடல் பயணங்கள் நிகழ்ந்தன. கடலுக்குள்ளிருந்து ராட்சத விலங்கு திடீரெனத் தோன்றி கபளீகரம் செய்துவிடும் என்ற பயம் எப்போதும் மனிதனுக்கு இருந்தது.தயக்கத்தையும் பயத்தையும் மீறி, தேவைகளினால் புதிய எல்லைகளைத் தேடி அவனது பயணங்கள் விரிந்தபோது புவியியலின் ரகசியங்கள் பிடிபட ஆரம்பித்தன.பயணங்களே உலகின் வரைபடத்திற்கு உயிர் கொடுத்தன.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கடல் பயணங்களில் அசகாய சூரர்களாக விளங்கிய பாலிநேசியர்கள், கிறுத்துவுக்கு முந்தைய காலத்திலேயே கப்பல் கட்டுவதில் கனவான்களாகத் திகழ்ந்த பெனிசீயர்கள், சூரியன் உதிக்கும் இடத்தைக் கண்டறியக் கிளம்பி அலெக்ஸாண்டர், புத்தரின் தரிசனங்களைத் தேடி நிகழ்த்திய பயணங்களால் அழியாத சரித்திரத்தைப் பதிவு செய்த ஃபாஹியான் மற்றும் யுவான் சுவாங் இரக்கற்ற கொள்ளையர்கள் என்றாலும் பத்தாம் நூற்றாண்டிலேயே வட அமெரிக்கக் கண்டத்தில் குடியேறிச் சாதித்த வைகிங்குகள், அன்றைய வெனிஸ் முதல் மயிலாப்பூர் வரை நமக்குக் காட்சிப்படுத்தும் மார்க்கோ போலோ, மெக்கா பயணத்துக்குக் கிளம்பி துக்ளக்கிடம் சிக்கி, தன் அனுபவங்களை திக் திககென விவரிக்கும் இபின் பதூதா, அதிகம் அறியப்படாத ஆச்சரியப் பயணி ஸெங் ஹே… இப்படி இந்தப் புத்தகம் பேசும் சுவாரசியப் பயணங்கள் ஏராளம்.
இவை பயணிகளின் / பயணங்களின் குறிப்புகள் மட்டுமல்ல. அந்தந்த நூற்றாண்டுகளில் உலகின் சரித்திரத்தைப் பதிவு செய்யும் ஆவணமும் கூட.
Reviews
There are no reviews yet.