Viththiyasa Ramayanam
புராண காலந்தொட்டு எத்தனையோ உபந்யாசகர்கள் ராமாயணத்துக்கு இசை கூட்டி, மெருகேற்றி தமது சொந்த, ஆக்கபூர்வமான திரிபுகளுடன் சொல்லி வந்திருக்கிறார்கள். அந்தக் கதைகளைக் கேட்கும் அன்பர்கள் கூட்டமும் அரங்கு நிறைந்ததாகவே இருந்திருக்கின்றன; இருக்கின்றன; இருக்கப் போகின்றன. காரணம், எல்லோருக்கும் தெரிந்த ராமாயணக் கதையை இவர் எப்படிச் சொல்லப் போகிறார் என்று கேட்டறியும் ஆவல்தான்.
அந்த வகையில் இதுவும் ஒரு வித்தியாசக் கற்பனையே! சில புதுமை விளக்கங்களோடு கூடிய இந்த ‘வித்தியாச ராமாயணம்’, ஏற்கனவே ‘ஆன்மிகம் பலன்’ மாத இதழில் தொடராக வெளிவந்து, பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது. இது ஏன் இப்படி இருந்திருக்கக் கூடாது; அது ஏன் அப்படி நடந்திருக்கக் கூடாது என்றெல்லாம் சிந்தித்ததன் விளைவே இந்தப் புத்தகம். ராமாயணத்தில் அதிகம் பேசப்படாத கதாபாத்திரங்களையும் மானசீகமாக சந்தித்து… ‘அப்படி நடந்ததாமே’, ‘இப்படி நடந்து கொண்டீர்களாமே’ என்று அவர்களிடம் கேட்டபோது, அவர்கள் தந்த பதில்கள்தான் இங்கே ஒரு அழகிய நூலாக மலர்ந்திருக்கிறது..
Reviews
There are no reviews yet.