PATHU NIMIDATHIL ENDHA JADHAGATHAIYUM EZHDHUVADHU EPPADI?
ஜாதகம் கணிப்பது பற்றிய நூல்கள் அடுக்கடுக்காக வெளிவந்து கொண்டிருக்கும் தருவாயில் மற்றுமோர் வெற்று நூலிது. இந்நூலில், வாக்கியப் பஞ்சாங்கம் மற்றும் திருக்கணிதப் பஞ்சாங்கப் பிரகாரம், ஜாதகம் கணிக்கும் முறைகள் தரப்பட்டுள்ளன. வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி துரிதமாக ஜாதகங்களைக் கணித்து விட இயலும். ஏனெனில் எல்லா ஊர்களிலும் சூரிய ஒளி படும் ராசிகளின் நேரம் ஒரே மாதிரியாக இருக்கும். மாறாக, திருக்கணிதப்படி, ஒவ்வொரு அட்சரேகை, தீர்க்க ரேகைகளுக்கேற்ப சூரிய ஒளி ராசிகளில் விழும் நேரம் மாறுபடும். அதற்கேற்ப இந்நூலில் அட்சரேகை, தீர்க்க ரேகை அட்டவணைகள், கழிக்க – கூட்ட வேண்டிய நிமிஷங்கள், எட்டு முதல் 12 பாகைக்கான லக்னங்கள், பகல் 12 மணிக்கான நட்சத்திர ஓரைகள் போன்ற விவரங்கள் தொகுத்தளிக்கப் பட்டுள்ளன. அனைத்துப் பஞ்சாங்கங்களிலும் இடம்பெறும் பொது அம்சங்களையெல்லாம் அப்படியே அச்சுப் பதித்தது யாவும் புத்தகத்தின் பாதிக்கும் மேலான பக்கங்களை விழுங்கியதுடன், பளுவையும், விலையையும் அதிகரிக்கச் செய்துள்ளது. மேலும், தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு ஊர்களின் பெயர்களுடன் `கழிக்கப்பட வேண்டிய நேரங்கள்’ அட்டவணைகளில் (பக்.8-10 மற்றும் பக்.170-185) நெல்லை – குமரி மாவட்டங்கள் இடம்பெறாதது ஏனோ? இதையெல்லாம் வைத்து ஜாதகம் எழுதவே முடியாது. அதற்கு கிளிஜோசியம் பார்த்து விடலாம். ஆசிரியர் முன்னுரையில் குறிப்பிட்டபடி, `உடனடி உணவகம்’ போலவே, அள்ளித் தெளித்த அவசர கோலமாகவே அமைந்துள்ளது இந்நூல்.
Reviews
There are no reviews yet.