1 review for மறுபக்கம்
Add a review
You must be logged in to post a review.
Original price was: ₹400.00.₹370.00Current price is: ₹370.00.
Out of stock
“மறுபக்கம்” நாவலை சமகால அரசியல் நாவலாக, வரலாற்று நாவலாக, மதவாத மற்றும் வகுப்புவாத வன்முறைக்கு எதிரான நாவலாக, சாதீய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான நாவலாக, நெய்தல் நில மக்களின் வாழ்க்கைப் பிரதிபலிக்கும் நாவலாக, பண்பாட்டுத் தளத்தில் பன்மைத்துவத்தை முன்வைக்கும் நாவலாக – எனப் பலவிதமாகவும் வாசிப்புக்கு உட்படுத்த முடியும். நாவலில் வரும் தேவகிருபை என்பவர் கூறுவார்; “வரலாற்றுக்குள்ளே தேடு, அங்கே சிறைப்பட்டுக் கிடக்கும் உண்மைகளை விடுதலை செய் விடுதலை பெற்ற உண்மைகள் உன்னை விடுதலை செய்யும்”. எதைத் தேடுவது. எப்படித் தேடுவது என்று நமக்குக் காட்டும் ஒளிவிளக்கு இந்நாவல்!
-எஸ்.பாலச்சந்திரன்
Delivery: Items will be delivered within 2-7 days
ART Nagarajan –
மறுபக்கம்
பொன்னீலன்
NCBH
எதிரும் புதிருமான கருத்துக்களால்
கட்டமைக்கப்பட்டு
வாசக சுதந்திரத்திற்கான இடத்தையும் விட்டுச் செல்லும் பெரும் படைப்பு
மறுபக்கம்.
சொல்லப்படாத
வரலாறுகளை சொல்லியும்,
கட்டமைக்கப்பட்ட
வரலாறுகளில்
அமுக்கப்பட்டுக் கிடக்கும்
மறைக்கப்பட்ட
வரலாறுகளையும்,
வாய்மொழி வரலாறுகள்,
நாட்டார் கதைகள், மரபுகள் ஆகியவற்றை,
நுரைத்தோடும்
ஆற்றுவெள்ளம் போல
சொல்லிச் செல்கிறது
“மறுபக்கம்”.
1982களில்
நாகர்கோவில்
பகுதிகளில் நடந்த
மண்டைக்காடு
பகவதியம்மன் கோயில்
கலவரம் பற்றிய ஓர் ஆய்வை
மேற்கொள்ள விரும்பும் இளைஞன்
வரலாற்றுக்குள்ளே தேடி, சிறைப்பட்டுக் கிடக்கும் உண்மைகளை
விடுதலை செய்கிறானா
என்பதை பேசுகிறது
மறுபக்கம்.
பெருவுடையார் கோயில், பிரகதீஸ்வரராக மாறியது,
கள்ளழகர் சோமசுந்தரரானது,
ஆறு நதியானது,
மலை கிரியானது,
அம்மன் அம்பாளானது,
ஜீவா போக்குவரத்துக் கழகம்,
நேசமணியானது,
இப்படி
பல வரலாற்றுத்
தகவல்களோடு,
நம்மை புடம் போட்டுச்
செல்கிறது “மறுபக்கம்”.
கம்மாளர்கள் ஒடுக்கப்பட்டது,
இந்த தேசமே ஒடுக்கப்பட்டது,
இப்படி ஒவ்வொரு சாதியும்
தம் சமூக இடத்தை இழந்து, தீண்டத்தகாதவர்களாக, கீழானவர்களாக,
ஆக்கப்பட்ட,
ஒடுக்கப்பட்ட வரலாற்றை
பதிவு செய்துள்ளது மறுபக்கம்.
ஒரு சாதியின்
சுயமரியாதையை
இன்னொரு
சாதியின் மீதான
வன்முறையாக மாற்றுவதை வகுப்புவாத அரசியலில்
தமக்கான
அரசியல் தடங்களை
வெட்டிக் கொள்கின்றது,
மறுபக்கம்,
ஒடுக்கப்பட்ட
சாதிகளுக்கிடையே
உள்ள கால கால உறவை வெளிப்படுத்துகிறது.
அதன் தொன்மங்களை
மையக் கதையாடல்களோடு இணைத்து,
வகுப்புவாதத்தின்,
வைதீகத்தின்,
அரசியல் தந்திரத்தை
கட்டுடைக்கிறது
இது நாவலின் முன்னுரையில்
ஐயா சி. சொக்கலிங்கம்
அவர்களின் முத்தாய்ப்பு.
வரலாற்றின்
மறுபக்கங்களை
தேசத்திற்கு சொல்கின்ற நூல்களை அர்ப்பணிப்போடு
அள்ளித்தரும்
NCBH நிறுவனத்திற்கு
நன்றிகள்.
வாசிப்பு அறிவை மேம்படுத்தும்
ART. நாகராஜன்
29.04.2020.