ஃபுக்குஷிமா ஒரு பேரழிவின் கதை:
நிலநடுக்கம், சுனாமி, ஃபுக்குஷிமா அணுஉலை விபத்து என மூன்று பேரிடர்களை 2011ஆம் ஆண்டில் ஜப்பான் சந்தித்தபோது அங்கு விளைந்த பாதிப்புகளை நேரில் அனுபவித்த சாட்சியான மிக்காயேல் ஃபெரியே, தன் அனுபவங்களையும், அங்குத் திரட்டிய தரவுகளையும் பகிர்ந்துகொள்ள உதவும் நூல் இது. மூன்று பகுதிகளாகப் பிரிந்து விரியும் இந்த நூலின் ஆசிரியர் அரசியலையும் அழகியலையும் இணைத்து அசாத்தியத் துணிவுடன் நிகழ்வுகளை விவரிக்கிறார். நிகழ்வுகளின் வர்ணனையில் அவ்வப்பொழுது ஆசிரியரின் பரந்த இலக்கிய ஆளுமையை உணரமுடிகிறது. பேரிடர்களைக் குறித்து பேசுகிற நோக்கத்தோடு கூடவே ஜப்பானிய நிலக்காட்சிகள், கலாச்சாரக்கூறுகள், வரலாற்றுப்பதிவுகள், தொன்மங்கள், பாஷோ போன்ற இலக்கிய ஆளுமைகள், வணிகத்தந்திரங்கள், பாலியல் உணர்வுகள், மனித மேன்மையும் பலவீனங்கள் என பன்முகமான இவரது எடுத்துரைப்பு விரிந்த தளத்தில் இயங்குகிறது.
Reviews
There are no reviews yet.