2 reviews for ஸ்பார்ட்டகஸ்
Add a review
You must be logged in to post a review.
Original price was: ₹400.00.₹380.00Current price is: ₹380.00.
உலகம் முழுவதிளுமுள்ள லட்சக்கணக்கான வாசகர்களின் சிந்தனையைத் தட்டியெழுப்பிய ஹோவர்ட் ஃபாஸ்ட்டின் பேணா முனையிருந்து சிதறிப் பாய்ந்த கண்ணைப் பறிக்கும் ஒளிக்கற்றைதான் ‘ ஸ்பார்ட்டகஸ் ‘
ரத்தவெறி பிடித்த ரோமாபுரி ஆட்சியாளருக்கு எதிராக அடிமைகளை ஒன்றுதிரட்டி, ரோமாஅபுரியையும் அதன் கருத்தோட்டங்களையும் ஒழித்துக்கட்ட தீவிரப் போராட்டம் நட த்தியவன் ஸ்பார்ட்டகஸ்.
ஸ்பார்ட்டகஸ் செய்த புரட்சி, வரலாற்று இரும்புக்கால்களின் கீழே நசுங்கிவிட்ட்து. சரித்திரத்தின் இருட்டறையில் அமிழ்ந்துவிட்ட அந்த உணர்ச்சிமயமான கதையை வெளிக்கொணர்ந்து ஹோவர்ட் ஃபாஸ்ட் நம் முன்னே வைத்துள்ளார்.
மனிதச் சமுதாயத்தில் பெரும்பான்மையினர் உடலை உருக்கி உழைத்துப் படைத்த செல்வச் சுகங்களை ஒருசிலர் தமதாக்கிக் கொண்டு சுரண்டிக் கொழுக்கும் காலம் தொடரும் வரை ‘ஸ்பார்ட்டகஸ்’ பெயர் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்; அது போர்க் குரலாய் நம்மை அழைத்துக் கொண்டே இருக்கும்.
Delivery: Items will be delivered within 2-7 days
ART Nagarajan –
ஸ்பார்டகஸ்
அடிமைகளின் சூரியன்
ஹோவர்ட் ஃபாஸ்ட்
தமிழில்: ஏ.ஜி.எத்திராஜுலு
ஏசுநாதர் பிறப்பதற்கு,
70 ஆண்டுகளுக்கு முன்பே,
தனது சகாக்கள்
6000 பேரோடு
“சிலுவையில்” அறைந்து கொல்லப்பட்டவர்
ஸ்பார்டகஸ்.
மோசஸின்
புரட்சிக்குப் பின்னால்
இன்றைக்கு
2100ஆண்டுகளுக்கு முன்
கி.மு.73ம் ஆண்டுகளில் திரேஷியன் அடிமைகளிலிருந்தே
“அடிமைகளின் சூரியனாக”, தோன்றினார்
ஸ்பார்டகஸ்.
ரோம சாம்ராஜ்யத்தில்
ஏராளமான அடிமைகள் இருந்தார்கள்,
அவர்களை
காட்டுமிராண்டித் தனமாக, மிருகங்களை விட
கேவலமாக நடத்தப்பட்டார்கள்.
சவுக்கடி வாங்கிக்கொண்டு வேலைகளை செய்தார்கள்.
சிறைச்சாலைகளுக்குள் சித்ரவதை செய்யப்பட்டார்கள்.
பெரிய, பெரிய,
மைதானங்களில்,
காலரி அமைத்து
ராஜாக்கள், ராணிகள்,
நிலப்பிரபுக்கள்
உட்கார்ந்து கொண்டு
கூண்டுக்குள்
பசியோடிருக்கும்
சிங்கத்தை திறந்து விட்டு
அடிமை ஒருவனையும் சிங்கத்தோடு
சண்டை போடவிட்டு
சிங்கம் மனிதனை கொன்று,
ரத்தம் குடிக்கும் காட்சியை, கைகொட்டி சிரித்து
வேடிக்கை பார்த்து கைதட்டி, “கெக்கலி” கொட்டி சிரித்தனர்!
ரோமானிய நிலபிரபுக்களை எதிர்த்து
ஒரு லட்சம் அடிமைகளை
திரட்டி போராடியவன்
ஸ்பார்டகஸ்.
அடிமைகளின்
விடுதலை புரட்சிக்கு
ஸ்பார்ட்டகஸ்
தனது காதலி வர்ணியாவோடு தலைமை தாங்கி
மூன்றரை ஆண்டுகாலம்
போராடினான்.
சிறைச்சாலைகளை
உடைத்து
லட்சக்கணக்கான
அடிமைகளை
விடுதலை செய்தான்
ஒருநாள்
சிங்கம் இருந்த கூண்டுக்குள் அனுப்பப்பட்ட ஸ்பார்டகஸ்,
சிங்கத்தின் வாயை நார்நாராக கிழித்து கொன்றுவிட்டு
வெளியே வந்தான்.
ரோம சாம்ராஜ்யத்தின்
பயிற்சி பெற்ற படைகளை ஸ்பார்ட்டகஸின்
அடிமைப்படைகள் ஓட, ஓட, விரட்டியது!
ரோமசாம்ராஜ்யத்தில்
மட்டுமல்ல,
ஐரோப்பிய நாடுகளும்,
ஏன், உலக நாடுகள்
அனைத்தும்
நடுங்கிப் போயிருந்த,
மாபெரும் புரட்சி அது.
இறுதியில்
சில துரோகிகளால் காட்டிக்கொடுக்கப்பட்டு
ஸ்பார்ட்டாகசும்
அவருடைய கூட்டாளிகள் ஆறாயிரம் பேரும்
சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார்கள்!
சிலுவையில்
அறையப்படுவதற்கு முன்னால்
ஸ்பார்ட்டகஸ்
அறிவித்த பிரகடனம்
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது!
ரோமா சாம்ராஜ்யத்தின் மாமன்னர்களே,
நாங்கள்
சிலுவையில் அறைந்து கொல்லப்படலாம்,
ஆனால்,
எங்கள் விடுதலை முழக்கம் உலகமெங்கும் கேட்டுக்கொண்டிருக்கிறது!
என்றார்.
ஸ்பார்ட்டகஸ்
சிங்கத்தின் வாயை கிழித்த சம்பவங்களைத் தான்
எம்.ஜி. ஆர். அவர்கள்
தனது குலேபகாவலி, அடிமைப்பெண்
போன்ற சினிமாக்களில்
காட்சிப் படுத்தி புகழடைந்தார்.
யேசுநாதருக்கு முன்பே “சிலுவையில்” அறையப்பட்டு
கொல்லப்பட்டவர்
ஸ்பார்ட்டகஸ் என்பது குறிப்பிடத்தக்கது!
ஸ்பார்டகஸ், வர்னியா
மற்றும் திரேஷியன்
தங்கச்சுரங்க அடிமைகளின்
நினைவுகளோடு,
நானும்
அவர்களின்
நினைவுத் தளங்கள்
அனைத்திலும் சுற்றி வந்தேன்!!
வாசிப்பு அறிவை மேம்படுத்தும்
ART. நாகராஜன்,
புத்தக வாசல், மதுரை,
10.05.2020.
kalarani manoharan –
அருமையான நூல்