ஆதி திராவிடர் மாநாடுகள் என்ற இந்த நூல் 1891 முதல் 1933 வரை நடைபெற்ற ஆதி திராவிடர்களின் மாநாடுகளைப் பற்றிய செய்திகள், தீர்மானங்கள் முதலியவற்றை உள்ளடக்கியதாகும். 1890, 91களில் அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோர் மாநாடுகளை நடத்தினார்கள். 1916இல் நீதிக் கட்சி தோன்றிய பிறகு ஆதி திராவிட மக்களிடமும் ஒரு எழுச்சி ஏற்பட்டது. 1917இல் எம்.சி.இராசா அவர்கள் ஆதிதிராவிடர் மகாஜன சபையை மீண்டும் புதுப்பித்தார்.
1925 முதல் மகாராட்டிரத்தில் அண்ணல் அம்பேத்கர் ஏற்படுத்திய தாக்கம், 1927இல் நடைபெற்ற மகர் இனப் போராட்டம், அதனால் ஏற்பட்ட எழுச்சி, 1932இல் தாழ்த்தப்பட்டமக்களின் தனித் தொகுதிக்கு எதிராக் காந்தி மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம், அப்போது காந்தியின் கொள்கைக்கு எதிராகத் தமிழகத்தில் நடைபெற்ற மாநாடுகளின் தீர்மானங்கள் ஆகியவற்றை இந்நூல் உள்அடக்கியதாகும்.
தமிழன், குடி அரசு, திராவிடன், ஆதிதிராவிடன், புதுவை முரசு, கோலார் தங்கவயலில் இருந்து 1927 முதல் 1933 வரை ஜி. அப்பாத்துரையாரால் நடத்தப்பட்ட ‘தமிழன்’ உள்ளிட்ட ஏடுகளிலிருந்து தொகுக்கப்பட்ட செய்தி இதில் இடம்பெற்றுள்ளன.

மதகுரு (கெஸ்டா பெர்லிங் ஸாகா)						
ஆதிச்சநல்லூர் வழக்கு எண் 13096/2017						
Reviews
There are no reviews yet.