Aadu Maadu Mattrum Manitharkal
இமெயில், இன்டர்நெட் என்று தொழில்நுட்பம் வளரும் வேகத்தில், கிராமங்கள் தங்கள் சுயத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கின்றன. ‘எங்கள் ஊரில் சிட்டுக்குருவி இருந்தது’ என்று ஆச்சரியமாகச் சொல்ல வேண்டிய நிலைக்கு வந்துவிட்டோம். பனங்காய் வண்டிகளையும் தென்னை ஓலையில் அமர்ந்துகொண்டு குழந்தைகள் குதூகலமாய் விளையாடிய காலத்தையும் இன்று தொலைத்துவிட்டோம். குழந்தைகளுக்கு இன்று கிடைப்பது விதவிதமான துப்பாக்கிகளும் அழகழகான பொம்மைகளும். ஒன்றைத் தொடர்ந்து ஒன்று மாறுவது இயல்புதான். கால நதி எப்போதும் ஓரிடத்தில் தேங்கி நிற்பதில்லை. மாற்றம் தவிர்க்க முடியாதது!
ஆனாலும் கடந்துபோன காலத்தின் மிச்சத்தை நினைத்து நினைத்து ஏக்கம் கொள்ளாதவர்கள் யார்? தான் பார்த்த வெள்ளந்தி மனிதர்கள் பற்றியும் அவர்களின் குணாதிசயங்கள் பற்றியும் இதில் ரத்தமும் சதையுமாக எழுதியிருக்கிறார் ஏக்நாத். ‘குங்குமம்’ வார இதழில், ‘ஆடு மாடு மற்றும் மனிதர்கள்’ என்ற தலைப்பில் தொடராக வெளியானபோதே ஏராளமான வரவேற்பைப் பெற்றவை இக்கட்டுரைகள். இவற்றை வாசிக்கும்போது நமக்குத் தெரிந்த ஒருவரிடம் தோளில் கைபோட்டுப் பேசிக்கொண்டிருப்பது போலவோ, தெரியாத ஒருவரை அருகில் இருந்து பார்ப்பது போன்றோ ஓர் உணர்வு நம்மை அறியாமலேயே ஏற்படுகிறது. அந்த உணர்வுதான் எழுத்தாளனையும் வாசகனையும் இணைக்கும் கோடாக இருக்கிறது.
Reviews
There are no reviews yet.