ஆலயப் பிரவேச உரிமை (முதற் பாகம்)

Publisher:
Author:

65.00

ஆலயப் பிரவேச உரிமை (முதற் பாகம்)

65.00

பி.சி. பிள்ளை என்று பலராலும் அன்புடன் அழைக்கப்பட்ட பி. சிதம்பரம்பிள்ளை அவர்கள் 1887ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 7ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் நகரில் பிறந்தவர். சிறிது காலம் திருவனந்தபுரம் மகாராஜா பெண்கள் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார். பிறகு நாகர்கோயில் மாவட்ட நீதிமன்றத்திலும், திருவனந்தபுரம் உயர்நீதிமன்றத்திலும், ஒரே சமயத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். திரு. ஈ.வெ.ரா. அவர்களுக்கு, பி.சி.பிள்ளை சட்ட ஆலோசகராகவும் இருந்து வந்தார். நூற்றுக்கணக்கான சுயமரியாதைக் கூட்டங்களில் பி.சி. பிள்ளை அவர்கள் உரையாற்றியுள்ளார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழி களிலும் அவர் பல நூல்கள் எழுதியுள்ளார். ‘ஆரியர்களும், திராவிடர்களும்’ என்ற புத்தகம் அவரால் எழுதப்பட்டதே.
‘தமிழன்’ என்ற வார இதழ் ஒன்றை அவர் பல ஆண்டுகள் நடத்தி வந்தார். சமுதாய சீர்திருத்தம் குறித்து அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள், ‘எதிரெழுச்சி’, ‘திருவிதாங்கூர் அபிமானி’ போன்ற, அக்காலத்தில் பிரபலமாக இருந்த பத்திரிகைகளில் வெளிவந்தன. அவர் எழுதிய பல கட்டுரைகளைத் தொகுத்து ‘ஆலயபிரவேச உரிமை’ என்ற இந்த நூல் வெளியிடப் பட்டுள்ளது.

Delivery: Items will be delivered within 2-7 days