ஆரிய மாயை:
பேரறிஞர் அண்ணா அவர்கள் ‘திராவிட நாடு’ இதழில் எழுதி – காங்கிரஸ் ஆட்சியிலே 1950இல் தடை செய்யப்பட்ட நூல்.
₹80.00
“ஆரிய மாயை” எனும் இச்சிறு நூல், நான் பல சமயங்களிலே எழுதிய கட்டுரைகளைத் தொகுத்தும், இன எழுச்சிக்குப் பாடுபடும் ஆற்றலறிஞர்களின் ஆராய்ச்சியுரைகளைத் திரட்டியும் வெளியிடப்படுகிறது, மேற்கோள்கள் பல தரப்பட்டுள்ளன. படிக்க மட்டுமேயன்றிப் பிறருக்கு விஷய விளக்க மாற்றவும். சந்தேகங்களைப் போக்கவும், மாற்றாரின் எதிர்ப்புரைகளுக்கு மறுப்புரை தரவும் இந்நூல் பெரிதும் பயன்படும் என்று கருதுகிறேன். பேச்சாளருக்குப் பேருபகாரியாக இந்நூல் இருக்கும்.
– அண்ணா
Delivery: Items will be delivered within 2-7 days
Poonkodi Balamurugan –
புத்தகம்: ஆரிய மாயை
ஆசிரியர் : சி.என்.அண்ணாத்துரை.
அண்ணா அவர்கள் எழுதிய நூல்களில் சர்ச்சைக்குரிய நூலாகவும், தடைசெய்யப்பட்ட நூலாகவும் , அவருக்கு ஆறுமாத சிறைதண்டனையும் , 700 ரூபாய் அபராதமும் பெற்று தந்த நூல்தான் ஆரியமாயை. மக்களிடையே கிளர்ச்சியைத் தூண்டும் வகையில் எழுதப்பட்ட நூல் என்று அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டதாம்.
திராவிட , ஆரிய கலாச்சாரங்கள் , அவர்களின் வேறுபாடுகள் , திராவிடம் ஆரியர்களின் வருகைக்கு முன்பு எப்படி இருந்தது, ஆரியர்களின் வருகையால் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன என்பதை பல இன ஆய்வார்களின் நூல்களில் இருந்து மேற்கோள் காட்டி தான் பல்வேறு இடங்களில் பேசிய உரைகளை நூலாக எழுதியுள்ளார்.
மேக்ஸ்முல்லர் போன்ற ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவை ஆரிய தேசமென்றும் , இந்திய நாகரீகத்தை ஆரிய நாகரீகம் என்று குறிப்பிட்டு வந்துள்ளனர். ஆனால் சர்.ஜான். மார்ஷல் போன்றோரின் ஆராய்ச்சிக்கு பிறகுதான் ஆரிய வருகைக்கு முன்னரே திராவிட நாகரீகம் இருந்ததென்றும் , இயறகையோடு ஒன்றி , வீரத்தோடு அறிவும் அறம் சார்ந்த வாழ்வியலையும் கொண்டு அந்த நாகரீகம் இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்கள்.
திராவிடர்கள் சாதி பேதமின்றி.ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள் . பின் ஆரியர்கள் திராவிட நாட்டில் வந்து குடியேறி திராவிட மன்னர்களின் தயவைப் பெற்றார்கள் . ஆரியரில் சிலர் அந்த மன்னர்களுக்கு குருவானார்கள். அதன் பின்னர் தான் ஆரிய நாகரீகம் தமிழ்நாட்டில் பரவத் தொடங்கியதாகவும் பல ஆய்வாளர்களின் மேற்கோள்களுடன் நமக்கு சுட்டிக்காட்டுகிறார்.
“நான் ஆரியரைப் போற்றவுமில்லை, போற்றிடக் கூறவுமில்லை! அதுபோலவே நான் அவர்களை ஏசவுமில்லை; ஏசிடும்படி உங்களை ஏவிடவும் இல்லை. பிறர் கூறிய ஏசலை எடுத்துக் கூறுகிறேன்” என்ற கூறித்தான் நூலை ஆரம்பித்துள்ளார்.கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது..
Kathir Rath –
ஆரிய மாயை
அறிஞர் அண்ணா
கீழடி போன்ற அகழ்வாராய்ச்சி தளங்கள் தந்த ஆதாரங்கள் இருக்கும் காலத்திலேயே திராவிட இனத்தின் வரலாற்றை ஒப்புக் கொள்ளவும் ஏற்று கொள்ளவும் தயாராக இல்லாத சமூகத்தை பார்க்கையில் சுதந்திரத்திற்கு முந்திய, கல்வியறிவற்ற, சாதியடிமை நிலை முழுமையாக பரவியிழுந்த காலத்தில் இன வரலாறை எப்படி மக்களிடம் கொண்டு சேர்த்திருக்க இயலும்?
கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதி மொழியின் ஆதியை பகுக்கிறார். அடுத்து வந்த அயோத்திதாசபண்டிதர் திராவிட இனத்தின் தனித்தன்மையை வெளிக்கொணர முயல்கிறார். பெரியார் திராவிட சித்தாந்த்த்தை மக்களிடையே விதைக்கிறார். அண்ணா திராவிடத்தை முழுமையாக தம்பிகளுக்கு கற்று கொடுக்கிறார். அதற்காக அவர் கையாண்ட பல வழிகளில் மிக முக்கியமானது இந்த நூல்.
எல்லாரும் நினைப்பதை போல இது ஆரிய துவேஷ நூல் அல்ல. நான் கூட முதலில் பூணூலோடு இருக்கும் நபரை கேலி செய்திருந்த அட்டைப்படத்தை பார்த்து வாங்காமலே வைத்திருந்தேன். ஆனால் அண்ணா பெரியார் அளவு கடினமானவர் அல்ல, அப்படியொன்றும் தனிப்பட்ட முறையில் தாக்கி இருக்க மாட்டார் என நம்பி வாசித்தேன். என் நம்பிக்கை சரியாக இருந்தது.
விந்திய மலைக்கு தெற்கே வாழ்ந்த இனம் திராவிடர் இனம் என்று மட்டுமன்றி ஆரியர் வருகைக்கு முன்பு இந்தியா முழுக்க பரவி கிடந்த தொல்குடி திராவிடக்குடி என ஆதாரத்துடன் நிருபிக்கிறார்.
ஆரியர்கள் வெளியில் இருந்து வந்தவர்களே, வந்து இங்கு இருப்பவர்களுடன் சண்டையிட்டும் முக்கிய பதவிகளில் அமர்ந்தும் தங்களது சித்தாந்தத்தை நாடு முழுக்க பரப்பியவர்கள் என்கிறார். இதற்கு ஆதாரமாய் அவர் கொடுப்பது பெரும்பாலும் பிராமணர்கள் எழுதிய நூல்களைத்தான். வேதங்களில் குறிப்பிடப்படும் தஸ்யூக்கள் என்ற பூர்வக்குடி திராவிடர்களுடனான யுத்தம் பற்றியும், இராமாயணம் குறிப்பிடும் அசுர இனமும் தற்போதைய தென்னிந்தியர்களே, குறிப்பாக தமிழர்கள்.
மேலும் அதை பற்றி உரையாட அவர் கொடுத்துள்ள நூல் பட்டியலை படித்து விட்டு வர அழைக்கிறார். அதை எழுதியவர்கள் அனைவரின் பெயர்ரகளின் பின்னாலும் ஐயர் & ஐயங்கார் என்றே இருக்கின்றன. பிராமணர்களின் எழுத்தையே ஆதாரமாக கொடுப்பவர் அவர்களை கேலி செய்வாரா என்ன? அவரின் நோக்கம் திராவிட இனத்தின் வரலாறு அனைவரையும் சென்று சேர வேண்டும் என்பது மட்டுமே. வேதங்களில் இருந்து சங்கபாடல்கள் வரை 1942 ல் இப்புத்தகம் வெளியான நாளின் இரண்டு மாதத்திற்கு முன்பு சோமசுந்தர பாரதி பேசிய உரை வரை தன்னால் எவ்வளவு ஆதாரங்கள் திரட்ட முடியுமோ அவ்வளவையும் திரட்டி தன் கருத்திற்கு வலு சேர்க்கிறார்.
தனித்தனி கட்டுரைகளெல்லாம் இல்லை, ஆரம்பித்தால் ஆற்று வெள்ளம் போல வேகமாக அடித்து செல்லும் எழுத்து. எடுத்தால் முழுவதுமாக முடித்து விட்டுத்தான் கீழே வைக்க இயலும்.
இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு படித்தாலே மயிர்கூச்செறிகிறது என்றால் அப்போது அவரது குரலில் கேட்டவர்களுக்கு போராட்ட குணம் வராமல் இருந்தால்தான் ஆச்சர்யம்.
திராவிடத்தின் பால் ஆர்வம் இருப்பவர்கள் அதை பற்றி விவாதிக்கும் வேளை வருகையில் எதிர்பக்கம் நின்று உரையாடுபவர்களிடம் கேள்வி எழுப்பவும், அவர்களின் கேள்விக்கு பதில் சொல்லவும் இந்த ஒரு புத்தகம் மட்டுமே போதும்.
1942ல் வெளியான இப்புத்தகத்தை சுதந்திரம் பெற்ற பிறகு 1950ல் தமிழக அரசு தடை செய்திருக்கிறது என்றால் இதன் வீரியத்தை புரிந்து கொள்ளுங்கள்.
Gangai –
endrum anna..
sathyan –
ஆரியரை நன்கு அறிந்தே இங்ஙனம் அர்ச்சித்திருக்கிறார். ஆரிய மாயையில் அவர் சிக்கிச் சொக்காத காரணத்தால், உள்ளது உள்ளபடி தீட்டிட முடிந்தது.