அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்

Publisher:
Author:

235.00

அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்

235.00

இத்தொகுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சிறுகதைகள் தனித்தன்மையோடும், ஒவ்வொரு முறையும் வாசிக்கிற போதும் குத்தீட்டி கொண்டு குத்துவதைப் போல ஏதோவொன்று குத்திக் கொண்டே, யாரோ ஒருவரையோ அல்லது சமகாலத்தில் நாம் சந்தித்து வருகிற சமூகம் குறித்தான நாம் கொண்டிருக்கும் உளவியல் பிரச்சனைகள் குறித்தோ உள்வயமான கேள்வி யொன்றை அடுக்கிக் கொண்டே போவதை உணர முடிந்தது.

ஒரு படைப்பு ஒரு வாசகனை ஏதோ ஒரு காரணத்திற்கு அவனை, அவனுடைய மனத்துடன் போராட்டம் நடத்த தயார் செய்யவதெனின் அப்படைப்பு பிரக்ஞைப் பூர்வமாக தொடர் வினையை ஏற்படுத்துவதில், அதில் வெற்றியடையச் செய்வதில் அப்படைப்பு முனைப்பு காட்டுமெனின் அப்படைப்பானது எழுத்தானின் சமகாலம், நிகழ் காலத்தைத் தாண்டி நிலைநிற்கும் என்பதை நாம் தமிழில் பல சிறுகதைகளை மாறிவரும் காலகட்டத்திற்கு ஏற்ப கட்டுடைத்தோ அல்லது அது குறித்த விமர்சனத்தையோ, குறைந்த பட்சம் உரையாடலையோ ஏற்படுத்துவதை
காண்கிறோம். அழகிய பெரியவனின் கடந்த இருபத்தைந்து ஆண்டு காலத்தில் எழுத்துலகில் இலக்கிய வகைமைகளில் கவிதை கட்டுரை நாவல் என தொடர்ந்து எழுதியும் வருகிறார். அவரது கடந்த காலம், நிகழ்காலம் குறித்த இலக்கிய ஆக்கத்திற்கு நிலையான ஒரு இடத்தைப் பெற்றுத் தருவதாக இத்தொகுப்பு அமைந்திருப்பதையும், தமிழ்ச் சமூகம் கொண்டாட வேண்டிய தருணம் இது என்று வேண்டிக் கொள்ளத்தான் வேண்டும் போலிருக்கிறது.

இத்தொகுப்பில் தொகுக்கப்பட்டுள்ள பதினேழு சிறுகதைகளில் பெரும்பாலான சிறுகதைகள் கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் வாழ்வியலையும், சமூகத்தின் நிலையையும், அம்மக்களின் மீது நடத்தப்படுகின்ற எல்லா வகையிலான சுரண்டல்களையும், அபத்தங்களையும் வெளிக்கொணரவும் செய்கிறது.

– இல. பிரகாசம்

Delivery: Items will be delivered within 2-7 days