1 review for Dongri To Dubai : தாவூத் இப்ராகிம்
Add a review
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____₹433.00
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
பரிசு பெற்ற நூல்கள் / Award Winning Books
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
Kathir Rath –
சபீர் அப்போதுதான் வீட்டை விட்டு கிளம்பி இருந்தான். அவனது கர்ப்பினியான மனைவிக்கு அவன் இப்படி இரவு நேரங்களில் வெளியே செல்வது பிடிக்கவில்லை என்றாலும் தடுக்க இயலவில்லை. தனது தம்பியுடன் பல சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் சபீர் தொழில் விசயமாக இப்படி இரவில் வெளியில் சென்றால் அவள் வருத்தப்பட்டிருக்க மாட்டாள். ஆனால் அவன் இப்போது செல்வது தனது காதலியை பார்க்க. அவள் பெயர் எதற்கு இப்போது?
சினிமா ஆசையில் மும்பைக்கு வந்து விபச்சாரத்தில் ஈடுபடும் பல இளம்பெண்களில் ஒருத்தி அவள். ஆண்களால் தொடர்ச்சியாக சதைப்பிண்டமாக பார்க்கப்பட்டவளுக்கு சபீரின் வருகைக்கு பிறகு எல்லாமே மாறியது. அவனுக்கு பிடித்தமானவளாக மாறியபின் அவள் இருந்த விடுதியில் அவளுக்கு தனி மரியாதை. அவன் வராத நாட்களில் அனுபவிக்கும் கஷ்டங்களெல்லாம் அவன் வந்த பின் மாயமாய் மறைந்து விடும்.
கொஞ்ச நாட்களாக சபீர் வராததால் அவளது தோழி தனது காதலனுடன் ஊர் சுற்ற அழைத்திருந்தாள். அவளுடன் கிளம்ப தயாராக இருந்தவள் கடைசி நிமிட சபீரின் தொலைபேசி அழைப்பால் தனது திட்டத்தை மாற்றிக் கொண்டாள். அந்த தோழியும் தனது காதலனிடம் திட்டம் இரத்தானதை விளக்கி சொல்லி விட்டாள்.
சபீர் தனது காதலியுடன் வழக்கமான ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு விட்டு, காரில் மும்பை டூ பூனே ரோட்டில் ஒரு லாங் டிரைவ் போகலாம் என தனது காரை கிளப்பினான். எதற்கும் வண்டியில் பெட்ரோலை நிரப்பிக் கொள்ளலாம் என ஒரு பெட்ரோல் பங்கில் வண்டியை நிறுத்தி டேங்கை நிரப்பிக் கொண்டு கிளம்புகையில்தான் ஒரு கல்யாண ஊர்வலத்திற்காக அலங்கரிக்கப்பட்ட வண்டி, தங்களை கடந்து செல்வதை கவனித்தான். சந்தேகம் எழவில்லை என்றாலும் ஏதோ தவறாய் பட்டது.
யோசனையில் இருந்த சற்று நேரத்தில் அந்த வண்டி நின்றது. அதிலிருந்து துப்பாக்கியும் கத்தியுமாக பலர் இறங்கவும் சுதாரித்து கொண்டு தனது ரிவால்வரை அவசரமாக தேடினான் சபீர். ஆனால் அதற்கு அவனுக்கு நேரமிருக்கவில்லை. அவனது உடல் சல்லடையாக்கப்பட்ட பின்பும் வந்தவர்கள் வெட்டி விட்டுத்தான் கிளம்பினார்கள்.
தங்களது நெடுநாள் எதிரியை கொன்ற வெற்றிக்களிப்பில் அதற்கு திட்டம் வகுத்து கொடுத்தவனை தங்களுக்குள் பாராட்டி கொண்டார்கள். ஹார்ட்லி சேஸ் நாவலை படித்து ஒரு கொலை திட்டத்தை ஒருவனால் திட்ட முடியும் என்பதை கூட ஏற்று கொள்ளலாம். ஆனால் அதை வைத்து சபீர் போன்ற ஒருவனை சாய்க்க முடியும் எனில் தங்களால் எதுவும் முடியும் என்ற மமதை அவர்களுக்கு ஏறியது.
அதே சூட்டோடு சபீரின் வீட்டிற்கு சென்று அவன் கூட்டத்தையும் குடும்பத்தையும் சுட்டு வீழ்த்தலாம் என கிளம்பினார்கள். அந்த தெரு அமைதியாகத்தான் இருந்த்து. மணி ஒன்றை நெருங்கி கொண்டிருந்த்து. நாய்கள் கூட சத்தமிடவில்லை. வண்டியை நிறுத்தி வீட்டை குறிபார்த்து சுட துவங்கியதுமே வீட்டில் இருந்து எதிர்தாக்குதல் வரும் என்று இவர்கள் எதிர்பார்க்கவில்லை. அதுவும் இவர்கள் வைத்திருந்த்து நாட்டு துப்பாக்கி, வீட்டில் இருந்து சுடுவது ஏகே47 ரகம். தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடினார்கள்.
வீட்டில் இருந்தவர்கள் யாருக்கும் காயமில்லையே என்று சரிபார்க்கையில் கூட்டத்தில் முக்கியமான நபர் இல்லை என்பது தெரிந்த்து. சபீரின் தம்பி விசாரிக்கவும்தான் சபீர் தன் காதலியை பார்க்க சென்றதும் அவன் சென்ற நொடியில் இருந்து அவன் திரும்புவதற்காக ஒருவன் வழக்கம்போல காத்திருக்கவும்தான் தெருவுக்குள் நுழைந்த வண்டியை பார்த்து சுதாரித்து அனைவரும் உஷாராக்கி எதிர்தாக்குதல் நடத்த முடிந்த்தும் தெரிய வந்த்து. ஆனால் சபீர் எங்கே? என்ற கேள்விக்கு விடை அவர்களுக்கு கிடைக்கவில்லை.
சபீர் பார்க்க சென்ற பெண்ணின் தோழியை பற்றி விசாரிக்கையில்தான் அவளது காதலன் தங்களது எதிரி கூட்டத்தை சேர்ந்தவன் என்பது தெரிய வந்த்து. தங்களை போன்ற சட்ட விரோத குழுக்களை சார்ந்தவர்கள் எப்போது எங்கே இருப்போம் என்ற தகவல் முன்கூட்டியே எதிரிகளுக்கு தெரிய வந்தால் என்ன நடக்கும் என்று இவர்களுக்கும் தெரியும். சற்று நேரத்தில் சபீரின் முடிவு எப்படி முடித்து வைக்கப்பட்டது என்ற தகவல் இவர்களை வந்தடைந்த்து்
அதே நேரம் அத்தகவல் மாநிலம் முழுவதற்குமே பரவியது. பல நகரங்களில் யாரும் எதுவும் சொல்லாமலே கடையடைப்பு நிகழ துவங்கியது. இறந்த சபீரின் தந்தை ஒரு ஓய்வு பெற்ற ஹெட் கான்ஸ்டபுள்.சமூகத்தில் அனைவராலும் மதிக்கப்பட்ட ஒரு முஸ்லீம். அவரது மகனுக்கு இப்படி ஒரு கொடுரமான சாவா என்று அனைவரும் பேசினார்கள்.
அத்தனை நாள் எதிரியாக நின்றவர்களில் பலர் இறப்புக்கு வந்து துக்கம் விசாரித்தார்கள். அவர்களது வருகை தங்களுக்கும் இச்சம்பவத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை சொல்வதற்கான சமிஞ்சை.
அப்போது வருடம் 1981, மகாராஷ்டரா மாநில முதல்வர் சபீரின் தந்தையை அழைத்து சந்தித்தார். இக்கொலையை செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்பூர்வமாகவோ சட்டத்திற்கு அப்பாற்பட்டோ தனது அரசாங்கம் தண்டனை வழங்கும் என்றும் சபீரின் தம்பி எதுவும் செய்யாமல் அமைதியாக இருக்குமாறு நீங்கள்தான் சொல்ல வேண்டுமர என்றும் கேட்டு கொண்டார்.
ஒரு மாநில முதல்வரே ஒரு சாதாரண முன்னாள் தலைமை காவலரை அழைத்து இப்படி கேட்டுக் கொள்வதற்கான காரணம் சபீரின் தம்பி மீதான பயம். சமீபத்தில் தான் அவனது பெயருக்கு பின்னால் பாய் என்ற மரியாதை விளி சேர்க்கப்பட்டது.
காவல்துறையால் படேல் கும்பலின் சட்ட விரோத நடவடிக்கைகளை ஒடுக்க வளர்த்து விடப்பட்ட அந்த நபரின் பெயர் “தாவுத் இப்ராஹிம்”. இந்த பெயரை கேள்விபடாதவர்கள் இந்தியாவிலேயே இருக்க முடியாது.
தற்போது D கம்பெனி என்ற பெயரில் மாபியாவினை ஒரு கார்ப்பரேட் கம்பெனி போல் நடத்தி வருபவர். 5000க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்ட அந்த மாபியா உலகின் இரண்டாவது பெரிய நெட்வொர்க்கை கொண்டது.
2010ல் போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் நாட்டின் பிரதமர் மன்மோகன்சிங்கை காட்டிலும் முந்தைய இடங்களை பிடித்தவர்.
இவரை பற்றி நமக்கு எவ்வளவு தெரியும்?
ஒரு டான்
மும்பை குண்டுவெடிப்புக்கு தொடர்புடையவர்
முன்பு துபாய்க்கு தப்பி ஓடி இப்போது பாகிஸ்தானில் இருக்கிறார்
வேறு?
இப்படி கண்டும் காணாமல் விட்டு விடக்கூடிய நபர் அல்ல தாவுத். அதேபோல் இவரை வளர்த்த மும்பை அண்டர்வேர்ல்டின் ஆரம்ப காலகட்டங்களையும் நாம் அறிந்திராமல் இருத்தல் கூடாது. ஏன் சொல்கிறேன் என்றால் அத்தனை அத்தனை சுவாரசியமான தகவல்கள்.
குறிப்பாக திரைத்துறையை சார்ந்தவர்கள் கட்டாயம் படிக்க வேண்டியது தாவுத்தின் வாழ்க்கை வரலாற்றை.
ஏற்கனவே பல விசயங்கள் இதில் இருந்து எடுத்து கொள்ளப்பட்டிருக்கின்றன
உதாரணத்திற்கு ஒரு டான் வருவதற்கு முன்பு ஒரு பிளாக் டீ கொண்டு வந்து வைக்கப்படும், கடனை வசூலிக்க டானுடைய கைத்தடி மட்டும் செல்வது இப்படி நிறைய…
மிக முக்கியமாக ஒரு டான் எப்படி அமெரிக்கா போன்ற நாடுகளின் கண்களில் கூட மண்ணைத்தூவிக் கொண்டு தொடர்ந்து தனது ராஜ்ஜியத்தை நடத்து முடிகிறது என்பதெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டிய விசயமாயிற்றே…
60 வருட மும்பை மாபியாவினை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து காட்டும் புத்தகம் இது, தமிழிலும் கிடைக்கிறது. தவறவிடாதீர்கள்.
என்னை கேட்டால் ஒவ்வொரு அத்தியாயமாக ரசித்து ரசித்து படிக்கும் வண்ணம் சுவாரசியங்களை கொண்ட நூல் இது என்பேன்.
ஆக்ஷன் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும்.