எம்மும் பெரிய ஹூமும்:
எம் என்றழைக்கப்படும் தாய் மனநோய் உள்ளவள். அதன் காரணமாக மிகுந்த மகிழ்ச்சி அல்லது அதற்கு நேர் எதிரான தற்கொலை எண்ணம் என இரு நேர் எதிர் துருவங்களுக்கு இடையே வசிப்பவள். எம் – இன் கணவரான ஹூம் தனது வேலையில் மூழ்கிக் கிடப்பவர்.
எம் – இன் மகன் தனது தாயின் நிலையை உன்னிப்பாக கவனித்து, அவள் அம்மாதிரியான மனநோய்க்கு ஆளாக, அவளுடைய கடந்த கால வாழ்க்கை காரணமாக இருக்குமோ என்று ஆராய்கிறான். தனது தாயும் தகப்பனும் எந்த அளவுக்கு ஒருவரையொருவர் நேசித்திருந்திருக்கிறார்கள்; நேசிக்கிறார்கள் என்பது அவனுக்குத் தெரிய வருகிறது. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் – அதுவும் அவள் ஒரு தாயாக இருக்கும்போது – அந்தக் குடும்பம் மகிழ்ச்சியான வாழ்க்கைக்காக எந்த அளவுக்குப் போராட வேண்டியிருக்கிறது என்பதை மிகவும் உணர்வுப்பூர்வமாக இந்நாவல் சித்திரிக்கிறது. மொழிபெயர்ப்பு என்பது தெரியாத வண்ணம் நாவல் நம்மை அதன் போக்கில் இழுத்துச் செல்வதைத் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
– நன்றி தினமணி
Reviews
There are no reviews yet.