இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

 மோகனச்சிலை
மோகனச்சிலை						 மலர்ச் சோலை மங்கை (பொன்னியின் செல்வனுக்கு முன்)
மலர்ச் சோலை மங்கை (பொன்னியின் செல்வனுக்கு முன்)						 தெனாலி ராமன் கதைகள்
தெனாலி ராமன் கதைகள்						 குருதியுறவு
குருதியுறவு						 அஞ்ஞாடி...
அஞ்ஞாடி...						 வியனின் விமானப் பயணம்
வியனின் விமானப் பயணம்						 நகுலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
நகுலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 நினைவோ ஒரு பறவை
நினைவோ ஒரு பறவை						 இரும்பு பட்டாம் பூச்சிகள்
இரும்பு பட்டாம் பூச்சிகள்						 Excellent Easy English Grammar
Excellent Easy English Grammar						 சாவித்திரிபாய் பூலேவின் வாழ்வும் போராட்டமும் - மறக்கப்பட்ட விடுதலைப் போராளி
சாவித்திரிபாய் பூலேவின் வாழ்வும் போராட்டமும் - மறக்கப்பட்ட விடுதலைப் போராளி						 வசந்தத்தைத் தேடி
வசந்தத்தைத் தேடி						 ஒரு பாய்மரப் பறவை
ஒரு பாய்மரப் பறவை						 அராஜகவாதமா? சோசலிசமா?
அராஜகவாதமா? சோசலிசமா?						 அறம் வெல்லும்
அறம் வெல்லும்						 வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு
வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு						 ஈழம் - தமிழ்நாடு - நான் (சில பதிவுகள்)
ஈழம் - தமிழ்நாடு - நான் (சில பதிவுகள்)						 நீதிநூல்கள்
நீதிநூல்கள்						 தினம் ஒரு பாசுரம் படிக்கலாம் வாங்க
தினம் ஒரு பாசுரம் படிக்கலாம் வாங்க						 புகார் நகரத்துப் பெருவணிகன்
புகார் நகரத்துப் பெருவணிகன்						 கம்பன் கெடுத்த காவியம்
கம்பன் கெடுத்த காவியம்						 பீலர்களின் பாரதம்
பீலர்களின் பாரதம்						 அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள்
அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள்						 மண் குடிசை
மண் குடிசை						 தமிழர் பண்பாடும் – தத்துவமும்
தமிழர் பண்பாடும் – தத்துவமும்						 காயப்படும் நியாயங்கள்
காயப்படும் நியாயங்கள்						 சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை (தலித் இதழ்கள் 1869 -1943)
சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை (தலித் இதழ்கள் 1869 -1943)						 இருட்டு எனக்குப் பிடிக்கும்
இருட்டு எனக்குப் பிடிக்கும்						 கவியோகி சுத்தானந்த பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
கவியோகி சுத்தானந்த பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 பண்பாட்டு அசைவுகள்
பண்பாட்டு அசைவுகள்						 நவக்கிரக வழிபாடும் பரிகாரங்களும்
நவக்கிரக வழிபாடும் பரிகாரங்களும்						 ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்						 அருளாளர்களின் அமுத மொழிகள்
அருளாளர்களின் அமுத மொழிகள்						 யுகத்தின் முடிவில்
யுகத்தின் முடிவில்						 ஆலிஸின் அற்புத உலகம்
ஆலிஸின் அற்புத உலகம்						 கஷ்ட நிவாரண ஆபதுத்தாரண ஸ்ரீ மஹா காலபைரவர் ஆராதனையும் உபாஸனையும்
கஷ்ட நிவாரண ஆபதுத்தாரண ஸ்ரீ மஹா காலபைரவர் ஆராதனையும் உபாஸனையும்						 திருக்குறளின் எளிய பொருளுரை
திருக்குறளின் எளிய பொருளுரை						 அரிஸ்டாட்டில் அறிவு உலகத்தின் ஆரம்பக்குரல்
அரிஸ்டாட்டில் அறிவு உலகத்தின் ஆரம்பக்குரல்						 கோட்சேயின் குருமார்கள்
கோட்சேயின் குருமார்கள்						 பாரதி விஜயம் (முதல் தொகுதி)
பாரதி விஜயம் (முதல் தொகுதி)						


Reviews
There are no reviews yet.