எட்டயபுரம்

Publisher:
Author:

90.00

எட்டயபுரம்

90.00

Ettayapuram
 Kalapria

 

 

கலாப்ரியா எழுதிய ‘சுயம்வரம்’, ‘ஞான பீடம்” ஆகியவற்றைத் தொடர்ந்து வந்த நீண்ட கவிதை எட்டயபுரம்(1982). வாழ்க்கை நோக்கிலும் அமைப்பு ரீதியிலும் முன்னிரண்டு கவிதைகளைக் காட்டிலும் சற்றே வித்தியாசமானது. இதில் வரும் சிதம்பரம், சித்தார்த்தன், அசோகன், புதிய கோணங்கி, சி, சுப்பிரமணியன், “இன்னொருத்தன்’ பெயர்களும் சம்பவங்களும் நீண்டதொரு அழுத்தமான பாரம்பரியப் பின்னணியை வெளிப்படுத்தும் அல்லது தொடர்புபடுத்தும் குறியீடுகள் எனலாம். இதேபோல ‘எட்டயபுரம்’, “கடற்கரை, ‘காற்று’. ‘அசோகஸ்தூபி போன்றனவும் குறிப்டுகளாக அமைந்து இன்றைய நம் அர்த்தமற்ற வாழ்க்கை, வாழ்வின் மீதான நிர்ப்பந்தம். அவலங்கள், நடப்புகள், எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், நம்பிக்கை, நம்பிக்கையின்மை யாவும் எட்டயபுரம் கவிதையில் வெளிப்படுத்தப்படுகின்றன. இக் குறுங்காவியத்தின் மூலம் கலாப்ரியாவின் கவித்துவ ஆளுமை, காட்சிப் படிமங்களை அமைக்கும் திறன், வாழ்வின் மீதான பார்வை, அனுபவ வெளிப்பாட்டின் அடிப்படைக் குறியீடான மொழியை ஆற்றலுடன் கையாளும் லாவகம் ஆகியவற்றைத் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.

Delivery: Items will be delivered within 2-7 days