2 reviews for இடக்கை
Add a review
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____
₹375.00 Original price was: ₹375.00.₹360.00Current price is: ₹360.00.
நீதி மறுக்கபட்ட மனிதனின் துயரக்குரலே இடக்கை. இந்நாவல் நீதி கிடைக்காத மனிதனின் துயர வாழ்வினைப் பேசுகிறது. ஔரங்கசீப்பின் கடைசி நாட்களில் துவங்கி மத்திய இந்தியாவின் புனைவு வெளியில் சஞ்சரிக்கிறது இடக்கை.
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
Poonkodi Balamurugan –
புத்தகம்: இடக்கை
ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்.
பேரரசுகள் வீழ்ச்சியடையும் போது சாதாரண எளிய மனிதர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்ற உண்மையை சித்தரிக்கும் கதைதான் இடக்கை. அவுரங்கசீப்பின் அந்திமகாலத்தில் இக்கதை தொடங்குகிறது. மாபெரும் ஹிந்துஸ்தானத்தை ஆட்சி செய்த மன்னனாக இருந்தாலும் உறக்கத்தின் முன்னே மண்டியிட்டுத்தானே ஆகவேண்டும். தான் குரூரமாக கொல்லப்படக்கூடும் என்ற எண்ணம் அவருக்குள் ஆழமாக பதிந்து போயிருந்தது. ஆயிரம் ஆயிரம் வெற்றிகள் கற்றுத்தராத வாழ்க்கைப் பாடத்தை சில நாட்களில் நோயினால் ஏற்பட்ட மரணப்படுக்கை அவருக்கு கற்றுக் கொடுத்தது. வாழ்வின் சொர்க்கம் நரகம் என்பது அங்குதான் .மரணப்படுக்கையில் இருக்கும் போது இனிய நினைவுகள் வந்தால் அதுதான் வாழ்வின் சொர்க்கம்.அதைதாண்டி நாம்செய்த தவறுகளும் , துரோகங்களும் அதிகப்பட்ச மனசில் ஓடிக்கொண்டேயிருந்தால் அதுதான் நரகம். அந்த நரகம் தான் அவுரங்கசீப்பின் மனக்கண்ணில் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு அதிகாலையில் சாவு பேரரசனை தனதாக்கிக் கொண்டது. அரசனின் மரணம் வெறும் நிகழ்வில்லை.அது பல்வேறு திருப்புமுனைகளின் முதற்புள்ளி. அதன் பிறகு ஆரம்பமானது அரசியல் சூழ்ச்சிகள் , அரியணை போட்டிக்கொலைகள்..
” என் கையால் தைத்த தொப்பிகளை விற்ற பணம் நான்கு ரூபாய் இரண்டு அணாவில் தன் உடலை மூடும் துணி வாங்க வேண்டும்..எனானுடைய கையால் பிரதி எடுக்கப்பட்ட குர்ஆன்களை விற்று கிடைத்த பணம் முந்நூற்று ஐந்து ரூபாயை ஏழை இசுலாமியர்களுக்கு உணவு வழங்கப்பட வேண்டும் . அந்தப் பணம் என்னுடைய அந்தரங்க பணியாள் அஜ்யாவிடம் உள்ளது. ” என்று அவுரங்கசீப்பின் இறுதி வாசகங்கள் தான் அஜ்யா சிறைப்பட முக்கிய காரணங்கள்.அஜ்யா என்பவள் ஒரு திருநங்கை. மன்னரின் அந்தரங்கப் பணியாள். அடிமைப்பெண்ணிடம் வைத்திருக்கிற நம்பிக்கை மகனான தன் மீது வைக்கவில்லையே என்று இளவரசன் முகமது ஆஜம்க்கு அவள் மீது கோபம்.மேலும் தன் தந்தை விலைமதிப்பில்லாத வைர வைடூரியங்களை ஔித்து வைத்திருக்கிற ரகசியம் அவளுக்கு தெரியும் என்று சிறையில் அடைத்து சித்ரவதைப்படுத்துகிறான் ..மாமன்னரின் அந்தரங்க பணியாளாக இருப்பது சாவோடு தோழமை கொண்டது போலத்தான்..தற்கால அரசியலிலும் கூட ஆட்சிகள் மாறும் போது முந்தைய தலைமைக்கு நெருக்கமான அதிகாரிகள் பந்தாடுப்படுவது நடந்து கொண்டு தானே இருக்கிறது.
அரசரின் உயில் ஒரு ஆட்டுத்தோலில் இருக்கிறதுஎன்று இளவரசன் தேட ஆரம்பிக்கும் போது ஆட்டுத்தோல் பதப்படுத்தும் தூமகேதுவும் விதியின் வசத்தால் கைதாகி காலா சிறையில் அடைக்கப்படுகிறான். காலா சிறை என்பது முகலாய பேரரசுக்கு கப்பம் கட்டும் பிஷாட மன்னர் கட்டிய சிறைச்சாலை. அங்கு ஆண்டு கணக்கில் நீதிக்காக காத்துக் கொண்டிருப்போர் ஏராளம். ஏனென்றால் மன்னன் இரு வழக்குகளுக்கு மட்டும் நீதி வழங்குவான். நீதியென்றால் விசாரணை அல்ல. இங்கி பிங்கி பாங்கி போடற மாதிரி இரு கைதிகளை வரச்செய்து அதில் ஒருவனுக்கு விடுதலை.ஒருவனுக்கு மரணத்தண்டனை என்று தீர்ப்பளிப்பான் . அப்படி ஒரு முட்டாள் மன்னின் சிறையில் தூமகேது மாட்டிக்கொண்டான். சாமர் என்ற தீண்டப்படாத இனத்தை சேர்ந்தவன்.செருப்பு தைப்பது , தோல் பதப்படுத்துவது , கழிவுகளை சுத்தப்படுத்துவது இதுதான் அவர்கள்தொழில். அவர்கள் அனைத்து செயலுக்கும் இடக்கையைப் பயன்படுத்தபவர்களாக இருந்தார்கள். அவர்கள் அடைந்த கொடுமைகளைப் படிக்கும் போது உண்மையில் மனசு ரொம்பவே கனத்துப் போனது . ஒரு சமயத்தில் அவன் காலா சிறையில் இருக்கும் போது உயர்சாதியினர் குளிக்கும் கிணற்றிலுள்ள வாளியை எடுத்துவிட்டான் என்பதற்காக நாயின் மலத்தை கரைத்து அவன் வாயில் ஊற்றும்படிஉயர்சாதியினர் செய்தது கண்ணீரை வரசெய்துவிடும்.என்ன..சாதியோ கர்மமோ..
இம்ரான் என்ற சிறுவன் அஜ்யாவாக மாறிய கதை , தூமகேதுவின் சாமர் இனத்தைப் பற்றிய கதை , ஒரு மண்புழு நீதி கேட்டு போன கதை, ஒருவனனஞ் தன் போதை தீர்த்து கொள்ள மனைவியை மண்ணாய் கரைய செய்த கதை , குரூர மன்னன் பிஷாடன் கதை என்று இந்த நாவல் விவரிக்கிறது.
நீதிக்காக காத்திருக்கும் ஒவ்வொரு மனிதனும் தனக்கான நீதி கிடைத்து விடும் என உறுதியாக நம்புகிறான். நீதிக்காக காத்திருக்கும் எளிய மனிதர்களின் வரலாற்றை நம்முன் சித்திரமாய் காட்டுகிறது இந்நூல்.
ART Nagarajan –
“இடக்கை”
எஸ். ராமகிருஷ்ணன்.
நீதி மறுக்கப்பட்ட மனிதனின் துயரக்குரல்தான் “இடக்கை”
ஒளரங்கசீப்பின் கடைசிநாட்களில் துவங்குகிறது இந் நாவல்
மத்திய இந்தியாவின் “சத்கர்”
நகரில் உலா வருகிறது!
நீதிக்கு காத்திருப்பது என்பது
தனி நபரின் பிரச்சினை மட்டுமில்லை,
இந்த தேசமும் தனக்கான நீதிக்காக காத்துக் கொண்டிருப்பதை இந்த நாவல் பேசுகிறது!
யாருக்கும் நீதி கிடைப்பது எளிதாகயில்லை.,
நீண்ட காத்திருப்பும்,
தேவையற்ற இழுத்தடிப்புகளும்,
முடிவற்ற விசாரணையும்,
நீதி பெறுவதை,
பெரும் போராட்டகளமாக்கி இருக்கிறது.
அநீதியின் குரூரத்தையும், அறிவீனத்தையும்,
இந்திய இலக்கியங்கள் அடையாளம் காட்ட தவறுவதில்லை.
அந்த வரிசையில்
நீதி கிடைக்காத மனிதனின்
அவல வாழ்வினை பேசுகிறது “இடக்கை”
வாசிக்கும் போது நமக்கு புலப்படும் செய்திகள் நம்மை மேலும் செழுமைப்படுத்தும்!
வாழ்த்துக்கள் எஸ்ரா
வாசிப்பு அறிவை மேம்படுத்தும்
ART. நாகராஜன்,
புத்தக வாசல், மதுரை.