Inaya Siraiyin Panaya Kaithigal
தற்போது கிடைக்கும் தரம் உயர்த்தப்பட்ட ஸ்மார்ட்போன்களின் வரவு இணையத்தை அணுகுவதை இன்னும் எளிமையாக்கி விட்டது என்றே கூறலாம். மனிதனும் கணினியும் தொடர்பு கொள்ளும் விதத்தில் மனித மனம் அதற்கு எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பதைப் பற்றியும், அதன் நன்மை தீமைகள் என்ன என்பதைப் பற்றியும் விளக்குவது தான் ‘சைபர் சைக்காலஜி’ என்ற பிரிவு. உளவியலின் இப்பிரிவு சற்றே கடினமானதாகவும் புதுமையானதாகவும் இருந்தாலும் எளிதில் விளங்கும்படியாக எழுதியுள்ளார் மருத்துவர் மோகன வெங்கடாசலபதி. கைப்பேசிப் பயன்பாட்டிலும், அதன் மூலம் சமூக வலைதளங்களை அணுகுவதிலும் இத்தனை விஷயங்கள் உள்ளனவா என்று நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன இந்த நூலின் அத்தியாங்கள்.
Reviews
There are no reviews yet.