இருநூறு தலைக்கட்டுகள் கொண்ட உகந்தநாயகன் குடிக்காட்டின் சுனைத் தண்ணீரின் ருசி இந்தக் கதைகளெங்கும் வழிந்தோடுகிறது. உழைத்து உழைத்து கட்டிபிடித்துப் போன கைகளைவீசி நடக்கிற மனிதர்களை, அவர்கள் வாழ்க்கைப் பாடுகளை, அவரது வயல் நிலங்களின் உழவுகளை, சாக்குப்போக்கு பார்க்காமல் காடுகரை எல்லாம் அலைந்து மேய்க்கிற அவர்கள் கால்நடைகளை, கபடங்களை, பொல்லாப்புகளை, இன்னும் என்னென்ன உண்டோ அத்தனையில் சொச்சத்தை இந்த ஒன்பது கதைகளின் வழி பதிவு செய்திருக்கிறார் அரசன்.
மனிதர்களோடு இயங்குவதின் ஊடே தன் மண்ணின் வாழ்நிலையைப் பதியும் குணாதிசயம் வாய்த்துக்கொண்ட அரசனை முழுவதுமாக வாசிக்கையில், தனித்துவமான ஒரு கதைசொல்லியை பழங்காசுகள் நிறைந்திருக்கிற செம்புக் குடத்தை துணியைச் சுற்றி மூடிவிட்டு, மண்ணுக்குள்ளே புதைத்து வைத்திருக்கிற மாதிரி அப்படியே விட்டு வைத்திருக்கிறோமே என்றுதான் படுகிறது எனக்கு.
– கார்த்திக் புகழேந்தி
Reviews
There are no reviews yet.