2 reviews for இந்தியாவில் சாதிகள்
Add a review
You must be logged in to post a review.
₹30.00
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எழுதிய முதல் நூல். ஒரு நூறாண்டு வரலாறு கொண்ட இந்த நூலில் அவர் வாழ்நாளெல்லாம் நடத்திய போராட்டங்களின் வித்தும் சத்தும் உள்ளன.
Delivery: Items will be delivered within 2-7 days
BOOK MARKS RAGAV –
https://youtu.be/SZv0m_2Wa5E
இந்தக் காணொளிப்பதிவு ‘ இந்தியாவில் சாதிகள்’ புத்தகம் பற்றியதானது.
அந்த புத்தகம் எப்படிப்பட்டது? இதை ஏன் வாசிக்க வேண்டும் என்பது பற்றி சொல்லும் ஓர் அற்புதமான பதிவு.
காணொளியைப் பாருங்கள்.
பார்த்து விட்டு புத்தகத்தை கண்டிப்பாக வாங்கி வாசியுங்கள்.
S.TAMIZHARASAN –
நூலின் பெயர்-இந்தியாவில் சாதிகள்
ஆசிரியர்-டாக்டர்பி.ஆர்.அம்பேத்கர்
இந்தியாவில் சாதிகள் என்ற இந்நூலின் முதல் பகுதியில் உள்ளது அம்பேத்கர் அவர்கள் நியூயார்க் கொலம்பியா யுனிவர்சிட்டியில் முதுகலை பட்ட மேற்படிப்பிற்காக மே 1916ல் சமர்ப்பித்து வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையான இந்தியாவில் சாதிகள் அவற்றின் அமைப்பி யக்கமும் – பிறப்பும் வளர்ச்சியும் ஆகும்.இந்நூல் மே1917ல் நூல் வடிவம் பெற்றது. இக் கட்டுரையின் தொடக்கத்திலேயே சாதியின் மூலாதாரத்தை முழுமையாக விளக்குவது சிக்கலானது ஆகையால் என்னுடைய இந்த ஆய்வுக்கட்டுரை மேற்குறிப்பிட்ட
தலைப்பிற்குள்ளேயே விளக்க முற்படுகிறேன் என்றே தொடங்குகிறார். ஆகையால் அதை கருத்தில் கொண்டே நாம் வாசிப்பைத் தொடர வேண்டும் என்று நினைக்கிறேன் .
ஆரியர்கள் ,திராவிடர்கள் ,மங்கோலியர்கள், சித்தியர்கள் ஆகியோர்கள் நாடோடிகளாக இந்தியாவில் உள்ள பூர்வீக குடிகளோடு கலந்த கலவையே தற்போதுள்ள இந்திய மக்கள் என்று நம்புவதாக கூறுகிறார் சாதி குறித்த வல்லுநர்களின் கருத்துக்களை ஆராயும் அம்பேத்கர் அதன் அடிப்படை இயல்புகளில் அகமணமேமே முக்கியமானது என்கிறார். மேலும் அகமணம் பிற சாதி குழுக்களுடன் கலவாமல் கட்டிக்காக்கும் அம்சமாக இருப்பினும் அதை தக்க வைத்துக்கொள்ள சாதிகள் ஆண் பெண் எண்ணிக்கைச்சமநிலையைப் பேணவேண்டியது கட்டாயமாகவும் அதன் காரணமாக சதி என்னும் உடன் கட்டை ஏறுதல் விதவைக்கோலம் போன்ற மத பழக்கத்தை கட்டாயப்படுத்துகிறது என்றும் ஆனால் அதுவே ஆண்களுக்கு அவ்வாறு செய்வதில்லை சில இழப்புகள் இருப்பதால் அவனை கட்டுப்படுத்தாமல் இருக்கலாம் என்கிறார். தொடக்கத்தில் இந்து மதத்தில் பிராமணர்கள் சத்திரியர்கள் வைசியர்கள் சூத்திரர்கள் என்று நான்கு வர்க்கங்கள் இருந்தன .இந்த வர்க்கங்களால் ஒரு வர்க்கத்தினர் மற்றொரு வர்க்கத்தினராக மாற வாய்ப்பிருக்கிறது ஆனால் ஒரு காலகட்டத்தில் பிராமணர்கள் மற்றவர்களிடமிருந்து தங்களை ஒடுக்கிக் கொண்டு கதவடைத்து கொண்டதன் காரணமாகவே சாதியின் தோற்றம் தொடங்கியிருக்க வேண்டும் என்று கூறுகிறார். பிராமணர்கள் தங்களை உள்ளிருந்து கதவை அடைத்துக் கொண்டதால் மற்றவர்களும் அவர்களைப் பார்த்து போலச்செய்து தங்களை கதவடைத்துகொண்டனர். இவ்வாறுதான் சாதிகள் உருவாகியிருக்கும் என்று நிறுவுகிறார் .
இரண்டாவது பகுதி சாதி ஒழிப்பு லாகூரில் நடக்கவிருந்த சாதி இந்துக்களின் அமைப்பான ஜாத்-பட்- தோடக் மண்டல் என்ற சாதி அமைப்பை அகற்றுவதற்கான கருத்தரங்கில் தலைமை உரையாற்றுவதற்காக தயாரிக்கப்பட்ட உரை தான் பிற்பாடு மண்டல் அமைப்பினரால் அம்பேத்கரின் புத்தகத்தின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாததால் நடக்கவிருந்த கருத்தரங்கை ரத்து செய்தனர் மே 1937ல் 1500 பிரதிகள் பதிப்பிக்கப்பட்டது.மேலும் மூன்றாம் பதிப்பில் இந்தியாவில் சாதிகள் அமைப்பு இயக்கம் என்ற நூல் 1917இல் பதிப்பிக்கப்பட்டதுடன் இணைத்து வெளியிடப்பட்டது.இந்தியாவில் சாதிகள் நூலிற்கும், சாதி ஒழிப்பு நூல் வெளியீட்டிற்குமான இடைவெளி 20 வருடங்களாகும் . இந்தியாவில் சாதிகள் அம்பேத்கர் அவர்களின் முதல் புத்தக வடிவம் பெற்று சாதி ஒழிப்பு என்ற இந்நூல் அம்பேத்கர் இந்து மதத்திலிருந்து வெளியேற முனையும் தருவாயில் எழுதப்பட்டது.
சாதி ஒழிப்பு என்ற தலைப்பிலான உரையின் அறிமுகப்பகுதியில் அம்பேத்கர் மற்றும் மண்டல் அமைப்பினருக்கு இடையேயான கடிதமும் தரப்பட்டுள்ளது இந்த கடிதத்திலேயே அம்பேத்கர் அவர்களின் ஜனநாயக தன்மையையும் புத்தகத்திலும் ஒரு
காற்புள்ளியையும் நீக்க முடியாது என்று கூறும் சுயமரியாதையும் மற்றும் விருப்பு வெறுப்பற்ற வெளிப்படைத்தன்மையும் நாம் அறிய முடிகிறது .அரசியல் சுதந்திரத்திற்கும் பொருளாதார சுதந்திரத்திற்கும் முன் சமூக சீர்திருத்தமே பிரதானமானதென்றும் ,பிறப்பு வழி தொழில் செய்விக்கப்படுவதன் பாதகங்களை விளக்கும் அம்பேத்கர் தொழில் ஒரு தனிமனிதன் விருப்பமாக இருக்க வேண்டும் என்கிறார். சாதிமுறை இனத் தூய்மையை பாதுகாக்கவோ ரத்தக்கலப்பை தடுக்கவும் உருவாக்கப்படவில்லை என்று கூறும் அவர் இந்து என்று ஒரு குடையின்கீழ் இருப்பதாகத் தோன்றினாலும் அவர்கள் சாதி என்ற குடும்ப நலன்களை பேணும் மனப்பான்மையுடன் இருக்கின்றனர் அதை இந்து என்று ஒட்டுமொத்தமாக ஒன்றுபடுவதற்குத் தடையாக இருப்பதாக கருதுகிறார் இந்துமதம் சமயப் பரப்பு மதமாக இல்லாததன் காரணம் சாதியே என்பதை யாராலும் மறுக்க முடியாது .சாதி ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் இல்லாமலாக்குகிறது. இவ்வாறு முதல் 13 அத்தியாயங்களில் சாதியின் பாதகங்களை விவரிக்கும் அம்பேத்கர் தனது இலட்சிய சமூகத்தின் அடிப்படைப் பண்புகளாக சுதந்திரம் ,சமத்துவம் ,சகோதரத்துவம் கொண்டதாக இருக்க வேண்டும் என்கிறார் இந்து மதத்தை கடுமையாக கண்டனம் செய்தாலும் மதத்தின் தேவையை தான் மறுக்கவில்லை என்கிறார்.ஆரிய சமாஜம் போன்ற இந்து மதத்தின் சாராம்சமான சதுர் வர்ணம் போன்றவற்றை வைத்துக்கொண்டு சாதியை ஒழிக்க முடியாது என்று நம்புகிறார்.
கடைசியாக இந்து சாஸ்திரங்களை பின்பற்றிக் கொண்டு சாதியை ஒழிக்க முடியாதெனவும் கலப்பு மணம் தான் சாதியை ஒழிக்க உண்மையான வழியாக உறுதியாக நம்புவதாக முடிக்கிறார்.
நான் படிக்கும் அம்பேத்கரின் முதல் நூல் இது.
1937ல் வெளியிடப்பட்ட சாதி ஒழிப்பு என்ற நூல் 83 வருடங்கள் கடந்த பிறகும் அதன் கேள்விகளும் பதில்களும் இன்னும் அப்படியே இருக்கின்றன.முதலாலித்துவ முதலை அந்தக்காலத்தினின்றும் சாதியின் பல கேடுகளை உடைத்தாலும் சாதிகள் மேலும் அதன் பரிணாமங்களை விரித்துக்கொண்டே செல்கிறதை நாம் பார்த்துக்கொண்டுதானிருக்கிறோம்.
அவர் கூறுவது போன்றே வெறும் பிரச்சாரத்தால் மட்டுமே சாதியை உருவாக்கவோ ,அழிக்கவோ முடியாதென்பதை மறுக்க முடியாதென்றே நினைக்கிறேன்.பிறகு எப்படி அது தன்னை தக்க வைத்துக் கொள்கிறது ?
என்ற கேள்வியை எழுப்பினால் அகமணம் மற்றும் மதத்தின் பாலுள்ள புனித நம்பிக்கைகள் வலுவான கட்டுப்பாடுகள்.
எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா அவர்கள் வலைதளத்தில் தான் மதத்திலோ கடவுள் நம்பிக்கையோ இல்லாதிருந்தாலும் பிறப்பு முதல் இறப்பு வரை இருக்கக்கூடிய சடங்குகளை எவ்வாறு எதிர்கொண்டார் அப்போது தான் உறவினர்களின் கைப்பாவையாக மாற்றப்பட்டதையும் அதைத் தவிர்க்க முடியாததையும் எழுதியிருப்பார்.
இவ்வாறு ஒரு சடங்காக மாற்ற முடியாத விதிகளாக நம்பிக்கையாக சாதியின் அஸ்திவாரம் பலமாகவே உள்ளது……
ஒவ்வொருவரும் படித்து தன்னை சுயபரிசீலனை செய்து கொள்ள துணைபுரியும் நூல்….