2 reviews for கழுவப்படும் பெயரழுக்கு
Add a review
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____₹50.00
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
அனைத்தும் / General
இல. வேந்தன் –
‘அம்பேத்கர்’ என்ற பெயர் அவரது ஆசிரியர் பெயரல்ல. அவரது குடும்ப பெயர்(surname). அவரது தந்தையின் பெயர் கூட ‘ராம்ஜி சக்பால் அம்பேத்கர்’. எனவே அவரது இயற்பெயர் ‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’ என்பதை வலுவான ஆதாரங்களுடன் இந்த புத்தகம் நிறுவுகிறது.
‘அம்பேத்கர்’ அவர்களுக்கு அவரது ஊர் தபோலியில் ஆரம்ப பள்ளியில் சேர்த்தபோது என்ன பெயர்? பிறகு சதாராவுக்கு குடியேறிய பிறகு என்ன பெயர்? அதற்கான சான்றாக அவரை பள்ளியில் சேர்ந்த பதிவு புத்தகத்தையே (Register) ஆவணமாக இணைத்து இந்த புத்தகத்தில் கொடுத்துள்ளது எல்லாம் எழுத்தாளர் யாக்கம் அவர்களின் அபாரமான உழைப்பை காட்டுகிறது.
புத்தகத்தின் அளவு சிறியதாக இருந்தாலும் ஆரம்பப்பள்ளி சான்று Bhimram என்ற பெயர் உறவினர்களால் இடையில் Bhivran என்றும் மாற்றப்பட்டு உபயோகப்படுத்தியதற்கு அமெரிக்காவின் கொலம்பியா- லண்டன் கடவுச்சீட்டு அலுவலக கடிதங்களை ஆதாரமாக இணைத்துள்ள இந்த புத்தகம் மிகப்பெரும் மலைப்புக்குரியது.
டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வரலாற்றை பேசும் அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம் இது. ஒரு அமர்வில் வாசித்து முடித்து விடலாம். (சில இடங்களில் ஆண்டுகளில் அச்சுபிழை உள்ளது. அதை ஏற்கனவே சிலர் சுட்டிக்காட்டி இருக்கலாம். அடுத்த பதிப்பில் சரிபார்க்கப்படும் என்று நம்புகிறேன்).
B.R அம்பேத்கர் யார்? என்ற பெயர் அடிப்படை அறிவை இந்த புத்தகம் வழங்குகிறது. சிறப்பான உழைப்புக்கு தோழர் யாக்கன் அவர்களுக்கும் மற்றும் இதில் இணைந்து உழைத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள்.
Arunthathi R –
புத்தகம் :கழுவப்படும் பெயரழுக்கு(அம்பேத்கர் என்ற பெயர் ஒரு பார்ப்பனருடையதா )
ஆசிரியர் :யாக்கன்
நீண்ட காலமாக அம்பேத்கரின் பெயர் குறித்த கட்டுக்கதைகளுக்கு சரியான சான்றுகளுடன் முற்றுப்புள்ளி வைக்கிறது இப்புத்தகம்.
மகர் இனத்தில் பிறந்து பீமாராவ் என பெயர் சூட்டப்பட்டவருக்கு “அம்பேத்கர் “என்ற பெயர் அவரை நேசித்த ஒரு பார்ப்பன ஆசிரியரின் பெயரென்றும், அப்பார்ப்பன ஆசிரியரே “அம்பேத்கர் “என்ற பார்ப்பன பெயரை பீமாராவ் ராம்ஜியுடன் இணைத்ததாகவும் சொல்லப்படும் பல கட்டு கதைகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது இந்நூல்.
அறிவு விபச்சாரம் என்ற பெயரில் அனைத்தும் தங்களாலேயே உருவாக்கப்படுகின்றன என்ற தோற்றத்தை பார்ப்பனர்கள் உருவாக்கி வைத்திருந்தாலும் உண்மை ஒருநாள் வெளிப்பட்டே தீரும் என்பதை ஆசிரியர் பல இடங்களில் அழுத்தமாக கூறியுள்ளார்.
உண்மையில் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என்பதே தன் முழுபெயரென்று அம்பேத்கர் அவர்கள் இலண்டன் செல்ல விண்ணப்பித்த போது தன் சுயவிவர குறிப்பில் குறிப்பிட்டுள்ளார் என சரியான ஆதாரங்களுடன் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். அரிய புகைப்படங்களையும், கடித்த ஆவணங்களையும் புத்தகத்தில் இணைத்துள்ளது தனி சிறப்பு.
சிறிய புத்தகம் என்ற போதிலும் ஏராளமான தகவல்களை தகுந்த ஆதாரத்துடன் தந்துள்ளார் ஆசிரியர் யாக்கன்.