கல்குதிரை – 32 இளவேனிற்கால இதழில் வெ.நி.சூர்யாவின் ‘கரப்பானியம்’ கவிதைத் தொகுப்புக்கான சாகிப்கிரான் கட்டுரையின் ஒரு பகுதி..
ஒன்று நினைவு என்பது தற்கணமாக்கப்பட்ட இறந்த காலம். மறதி என்பது இறந்த காலமாக்கப்பட்ட தற்கணம். அது மிகப் பூடகமானது. இரண்டும் ஒரு புள்ளியில் செயல்படுகின்றன. இதுதான் கலையாக்கம். ஒன்று மற்றொன்றாக மாறும் சடுதி மாற்றம். அதுவே கலையின் ஊற்றுக்கண்ணாக, படைப்பின் ரகசியமாக இருக்கிறது. எனவேதான் வெளிறிய காக்கைகள் பறக்கும் அந்திவான சூரியனை ஓவியக் கித்தானில் கொண்டுவந்து பொருத்துகிறது, காதையிழந்த வான்கா காலத்தை மடைமாற்றும் பதற்றத்தின் வெறுமனே ஓவியமல்லாத படைப்பு வெளிப்பாடு, கவிதையிலும். இங்கே ஒரு விஷயத்தை வாசகன் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும் வாசிப்பு வெறுமனே தகவல்களைப் பொருத்திப் பார்க்கும் ஒரு மனச் செயல்பாடல்ல. படிப்படியாக ஆன்மாவை, அது தான் அடைய விரும்பும் அதன் தன்மையின் உள்ளார்ந்த செயல்பாடாக நடக்கும் அனைத்தையும் இனம் கண்டு கொள்ளும் ஒரு செய்கையாகும். மேன்மக்கள் தன்னியல்பாக அதை நோக்கிச் சென்றுவிடுகின்றனர். படைப்பாளி புறச்செயலின் வழியாக அதை கண்டு கொள்ளும் வாய்ப்பை எப்போதும் இழந்துவிடக்கூடாது. சூர்யாவின் தேடல் என்பதைவிட செயல்பாடே இப்படித்தான் இருக்கிறது. நெடுங்கவிதைகள் பெரும்பாலும் இதற்கு சாட்சியாகத்தான் இருக்கின்றன..
நன்றி: சாகிப்கிரான் | கல்குதிரை – கோணங்கி

108 திவ்ய தேச உலா பாகம் (பாகம் – 4)
Mother
உயர்ந்த உணவு
English-English-TAMIL DICTIONARY Low Priced 


Reviews
There are no reviews yet.