600 பக்கங்களில் முழு மகாபாரதத்தையும், கதை மாந்தர்களின் மோதல்களையும், வீழ்ச்சியையும் அவருடைய கோணத்தில், மக்கள் மொழியில் உணர்ச்சிபூர்வமானக் காவியமாகப் படைத்திருக்கிறார் பூமணி.”
– தி இந்து
Original price was: ₹555.00.₹530.00Current price is: ₹530.00.
மகாபாரதம் என்னும் மாபெரும் காவியத்தில் இன்னும் உயிர்ப்புடன் உலவும் அபலைப் பெண்களின் அவலத்தை முன்வைத்து மறுகுரலில் மக்கள் மொழியில் ஒரு பெரும் புதினம் புனைய வேண்டுமென்பது என் வாழ்நாள் கனவுகளில் ஒன்று. ஒரு மகாசமுத்திரம். அதில் அலையாடும் பெண்களை அணுகப் பேரச்சம். அவர்களுடன் உரையாட மலைப்பு.பாரதப் பெண்கள் பலதரப்பட்டவர்கள். காலங் காலமாகப் போகப் பொருளாகவும் கேளிக்கைச் சாதனமாகவும் நித்திய கன்னியாக வாழ்ந்துவரும் தேவதை கங்காதேவி. யமுனையில் படகோட்டிச் சேவைசெய்த மச்சர் குலப் பெண் சத்தியவதி.ஆணாதிக்கத்தால் அலைக்கழிக்கப்பட்டு வாழ்க்கையைத் தொலைத்தவள் அம்பை.தன்னை செயற்கைக் குருடாக்கிக்கொண்டு இயற்கைக் குருட்டுக் கணவனைக் கைப்பிடித்தவள் காந்தாரி.இளம்பருவத்தில் முனிவனுக்கு அந்தரங்கத் தொண்டு செய்தது முதல் குருதேசத்தின் ராணியாக உயர்ந்தது வரை சகல அவலங்களுக்கிடையிலும் வைராக்கியமாக வாழ்ந்துமுடித்தவள் குந்தி. விலைக்கு வாங்கப்பட்ட சூதர் குலப் பெண் மாதுரி.இவர்களைப் போல் இன்னும் எத்தனையோ அபலைகள்.மகாபாரதத்தில் சூத்திரதாரியாக இயங்கும் கிருஷ்ணனை எனக்கு ரெம்பப் பிடிக்கும். அவனது தீம்புகள் எனக்கு ரெம்ப ரெம்ப ருசிக்கும்.
மனிதனாக அவதரித்த கிருஷ்ணன் எனக்குச் சேக்காளி. உற்ற நண்பன். விளையாட்டுத் தோழன். அன்பான அண்ணன் வழிகாட்டி இன்னும் என்னென்னமோ…கிருஷ்ணனுடன் ஆடு, மாடு மேய்த்தேன். ஆற்று மணலில் ஆடிப் பாடினேன். ஆலமரத்தடியில் கிட்டிக்குச்சு விளையாடினேன். ஆயர்பாடியில் வெண்ணெய் திருடினேன். பச்சைக் குதிரை சுமந்தேன். பூவரச இலையில் புல்லாங்குழல் செய்து ஊதினேன். வில்லம்பினால் விலங்குகளை வேட்டையாடி வேகவைத்து உண்டு பசியாறினேன்.
Delivery: Items will be delivered within 2-7 days
ART Nagarajan –
“கொம்மை”
பூமணி
டிஸ்கவரி புக் பேலஸ்,
மகாபாரதம் எனும் மாபெரும் காவியத்தில் இன்னும் உயிர்ப்புடன் உலவும் அபலைப் பெண்களின் அவலத்தை முன்வைத்து மறுகுரலில்
மக்கள் மொழியில்
ஒரு பெரும் புனைவு புனைந்திருக்கிறார்
பூமணி
காலங்காலமாக போகப்பொருளாக,
கேளிக்கைச் சாதனமாக,
நித்தியகன்னியாக, பேரவலத்தோடு
வாழ்ந்து வரும் கங்காதேவி,
தீவுத்திட்டுகளில்
பராசர முனிவனுக்கு
வியாசனை
பெற்றுக் கொடுத்துவிட்டு,
முதிய மன்னனின்
அரண்மனைக் கிளியான சத்தியவதி!
ஆணாதிக்கத்தால் அலைக்கழிக்கப்பட்டு
வாழ்வைத் தொலைத்த அம்பை,
குருட்டு கணவனின்
கண்களுக்கு
அறிவுக் கண்களாக இருக்க
வேண்டியவள்
ஆணாதிக்க கொடூரத்தால் செயற்கை குருடாகி
தன் நூறு மகன்களை
இழந்த காந்தாரி,
போஜராஜனின்
வளர்ப்பு மகள் குந்தி,
இளம்பருவத்தில்
முனிவனுக்கு இடம் கொடுத்து கர்ணனை பெற்றவள்,
குருதேசத்தின்
ராணியாக உயர்ந்து
சகல விதமான
அவலங்களோடு
வைராக்யமாக
வாழ்ந்து முடித்தவள்!!
விலைக்கு வாங்கப்பட்ட
சூதர்குலப் பெண் மாத்ரி,
எந்தச் சுகமுமின்றி
சொற்ப காலமே வாழ்ந்து கணவனோடு தன்னையும் மாய்த்துக் கொண்டவள்
ரகுவம்ச அரச குடும்பத்தால்
கைவிடப்பட்ட இடும்பி, உலூபி, மற்றும் கணவனின் சூதாட்டத்திற்கு பந்தயப் பொருளாகிப்போன
பாஞ்சாலி,
இவர்களோடு
காலமும் சேர்ந்து கொண்டு
வெறிக் கூச்சலோடு
சேர்ந்திசைக்கும் ஓலம்,
இன்று வரை ஆணாதிக்கத்தால் அல்லலுறும் பெண்ணினத்தின் அலையோசையாக,
வரலாறு நெடுக,
மனித குலத்தின் காதுகளில் இன்றளவும் கேட்டுக்கொண்டே இருக்கிறது!
வாசியுங்கள்,
வாசிப்பு அறிவை மேம்படுத்தும்
ART.நாகராஜன்
புத்தக வாசல், மதுரை.