Kudumpam, Thanichothu, Arasu Akiavatrin Thotram
‘குடும்பம்’ என்ற அமைப்புகுறித்துத் தீவிரமான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளன. இப்போதும் நடைபெறுகின்றன. பன்னெடுங் காலமாக நிலவி வந்துள்ள கருத்துக்களின்படி, குடும்பத்திற்கு ‘ஆண்’ தலைவர்; பெண் வீட்டு வேலைகளுக்கும், மகப்பேறு தொடர்பான அனைத்திற்கும் பொறுப்பு. மரபுரீதியாக, எழுதப்படாத சட்டமாக பாலினப் பாகுபாட்டை நிலைநிறுத்தி வந்திருப்பதோடு, தலைமுறை தலைமுறையாக இக்கருத்துக்களைப் பின்வரும் சந்ததியினருக்கு எடுத்துச் சொல்லுகிற வலிமையான ஊடகமாகவும் குடும்பம் திகழ்கிறது.
Reviews
There are no reviews yet.