Maarupattu sindhiyungal
ஆறு கீழ் இருந்து தண்ணீரைப் பெறுவதில்லை. தன்னிடம் உள்ள நீரைத்தான் பிறருக்கு அளிக்கிறது. இந்த ஆற்றிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் அநேகம். எல்லாவற்றையும் மாறுபட்டு சிந்திக்கின்ற முறைகளைத்தான் உங்களுக்குக் கற்றுத் தருகிறது இந்தச் சிறிய புத்தகம்.ஆறுகள் மலையிலிருந்து உற்பத்தியாகிச் சமவெளியை நோக்கிப் பாய்கின்றன. அதுபோல உயர்ந்தோர் தாழ்ந்த நிலையிலுள்ள மக்களைத் தேடி அவர்களுக்கு உதவி செய்யத் தன் நிலையை விட்டுக் கீழே இறங்கி வருகிறார்கள். ஆறானது வானத்திலிருந்து நீரைப் பெற்று அதைத் தன்னிடமே வைத்துக் கொள்ளாமல் பிறருக்கு வழங்கிச் சந்தோஷப்படுகிறது. அவ்வாறில்லாமல் அது தானே அதைத் தேக்கிவைத்துக் கொண்டால் புதுத் தண்ணீரை அதனால் உள்வாங்கிக் கொள்ள முடியாது என்பதுடன் நாற்றம் பிடித்தும் போகும். அதுபோல மேன்மக்கள் தங்கள் அறிவைப் பிறருக்குத் தருவதால்தான் புதுப்புதுச் சிந்தனைகள் அவர்களுக்குள் ஊற்றெடுக்கின்றன.இன்றைக்கு மனிதன் சந்திக்கும் சவால்கள் ஏராளம். அந்தச் சவால்களை சந்தித்து வெற்றிக்கொள்ள சிந்தனையில் அவனுக்குப் பெரும் தெளிவு இருக்க வேண்டும். மனிதனுடைய சிந்தனைகளின் பிற்பபிடமாக இருப்பது அவன் மனம்தான். ஆனால் அந்த மனம் பழுதடைந்த எந்திரத்தின் நிலையை அடையும்போது அவனால் எந்த ஒரு தெளிவான முடிவுக்கும் வர முடிவதில்லை. அந்த நேரத்தில் தெளிவு பெற அவனுக்கு வேறொருவருடைய துணை தேவைப்படுகிறது. அத்தகைய ஒரு துணையாய் இந்தப் புத்தகம் அவனுக்கு இருக்கும்.

Dravidian Maya - Volume 1
Dongri To Dubai : தாவூத் இப்ராகிம்
Elementary Principles of Philosophy
English-English-TAMIL DICTIONARY
English-English-TAMIL DICTIONARY Low Priced
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர் 
Reviews
There are no reviews yet.