Madurai Potrudhum
படிக்காத ரவுடிகள், எப்போது பார்த்தாலும் கூச்சல் போட்டுப் பேசிக் கொண்டு, முதுகுப்பக்கத்திலிருந்து அரிவாளை எடுக்கும் முரடர்கள்தான் மதுரைக்காரர்கள் என்று ஏனோ படங்களில் காட்டுகிறார்கள். என் மகள் கோவையில் ஒரு பெரிய பொறியியல் கல்லூரியில் சேர்ந்தபோது, அவளுடைய பேராசிரியர் வரிசையாக ஒவ்வொருவரிடமும் அவரவரது ஊர், பள்ளி பற்றி விசாரித்திருக்கிறார். என் மகள் மதுரை, கேந்திரிய வித்யாலயா என்றதும், அவர் ‘என்ன, மதுரைல கேந்திரிய வித்யாலயா கூட இருக்கா?’ என்றாராம் கிண்டலாக. என் மகள் கோபமாக, ‘ஒன்றல்ல, இரண்டு இருக்கின்றன. மூன்றாவதும் வரப்போகிறது’ என்றாளாம். மதுரை பற்றி வெளியூர்க்காரர்களின் பார்வை இதுதான். ஆனால், சங்கம் வைத்து முத்தமிழையும் வளர்த்த அந்தப் பழைய மதுரை அப்படியேதான் இருக்கிறது. எழுத்தும், இசையும், நாடகமுமாகத்தான் எங்கள் மதுரை இன்றும் இருக்கிறது என்பதை நான் என் கண்களால் நேரடியாகப் பார்த்திருக்கிறேன். பார்த்து வருகிறேன். அதைத்தான் இங்கே எழுதி இருக்கிறேன்.
Reviews
There are no reviews yet.