Maruppata Konaththil Billgates Vettrikatai
உலகிலேயே மிகக்குறைந்த வயதில் கோடிகளைக் குவித்தவர்கள் வரிசையில் முதல் இடத்தைப் பெறுபவர் பில்கேட்ஸ். கணினித் துறையில் பல சாதனைகள் நிகழ்த்திய மன்னன். ஆயிரக்கணக்கானவர்கள் கணினி செய்தார்கள். பல்லாயிரக்கணக்கானவர்கள் அவற்றை வாங்கி வைத்துக்கொண்டார்கள். இதனால் ஏற்பட்ட பலன் என்ன என்று பார்த்தால் சூனியம்தான். ஆனால் வாங்கி வைத்துக் கொண்ட கணினியை வேலை வாங்க வழி செய்தாரே பில்கேட்ஸ். இவரைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்த அத்தனை பேரும் கேட்டது இவரது வாழ்க்கை வரலாற்றைத்தான். இத்தனாம் தேதி பிறந்தார், இத்தனாம் தேதி இதைச் செய்தார் என்று இவரைப் பற்றி ஒப்புவிக்க அட்டவணை ஒன்று போதும். ஆனால் அது உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா? உங்களையும் ஒரு பில்கேட்ஸ் ஆக்கிக்காட்ட வேண்டும் என்பதே எங்களது நோக்கம். அதை நிறைவேற்ற வேண்டுமென்றால் இவரது வாழ்க்கையை இப்படித்தான் அலச வேண்டும் என்று முடிவு செய்தோம். வாழ்க்கைக்கதைதான். அதை வித்தியாசமாகக் கொடுத்திருக்கிறோம். வாங்கிப்பாருங்கள். வாழ்ந்து காட்டுங்கள்!

கனம் கோர்ட்டாரே! 
Reviews
There are no reviews yet.