1 review for மெஜந்தா
Add a review
You must be logged in to post a review.
Original price was: ₹120.00.₹113.00Current price is: ₹113.00.
ஏழை, பணக்காரன் என்ற பேதமின்றி ஒட்டுமொத்த இந்தியர்களையும் பாதிப்பிற்குள்ளாக்கிய வண்ணம் – “மெஜந்தா”.
ஏன்? எப்படி? எதனால்? என்ற கேள்விகளுக்குப் பின் சமகாலத்தில் நடந்த ஒரு வரலாற்றுப் பிழையை, சுவாரஸ்யமான கதைப் பின்னணியில் வேறொரு கோணத்தில் விவரிக்கிறது இந்த நாவல்.
தமிழில் அதிகம் முயற்சிக்கப்படாத ‘மாற்று வரலாறு’ என்ற தளத்தில் எழுதப்பட்டிருப்பது நாவலின் மற்றுமொரு சிறப்பு.
Delivery: Items will be delivered within 2-7 days
Kathir Rath –
மெஜந்தா
Pradeep Pandian Chelladurai
இந்திய அரசின் கருப்ப பண ஒழிப்பு நடவடிக்கை குறித்து எழுதுகன்னு ஒரு கேள்விக்கு பதில் சொல்ல ஆரம்பிச்சா 2014 நீதிபதி ஷா கமிசன்ல இருந்து ஆரம்பிக்கனும். தொடர்ச்சியா ஏகப்பட்ட நடவடிக்கைகள், சட்ட திருத்தங்கள், அமலாக்கத்துறையோட கெடுபிடிகள், வரிஏய்ப்பு துறையோட கண்காணிப்புகள், இது தவிர்த்து பல துறைகளோட ஒருங்கிணைந்த ஆபரேசன்கள்னு 4 பக்கத்துக்கு 2016 வரையிலான நடவடிக்கைகளை எழுதலாம். எல்லாமே ஓரளவு பலன் தந்த நடவடிக்கைகள்தான். ஒன்னை தவிர, நவம்பர் 8 2016, இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி அவர்களால் அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்கத்தை தவிர…
மற்ற நடவடிக்கைகள்லாம் வரி ஏய்ப்போட சேர்த்து கருப்பு பண உருவாக்கத்தை தடுக்கற திட்டமா கொண்டு வந்தப்ப நேரடியா மொத்த கருப்பு பணத்தையும. ஒழிக்கறன்னு நாட்டோட பொருளாதாரத்தை கிழிச்சதுதான் இந்த நடவடிக்கை. யாராலயும் மறந்துடவே முடியாது. சும்மாவா? எதுக்குமே கத்தாத பல்லி கூட “ஹேட்ஸ் ஆப் மோடிஜி, நியு இண்டியா பார்ன்” னு நக்கல் பண்ணுச்சே, அதுக்கு இன்னுமாய்யா கருப்பு பணமெல்லாம் பணமாவா இருக்கும்னு நம்பிட்டுருக்கன்னு அர்த்தம்.
அப்ப சரிய துவங்குன நாட்டோட ஜிடிபி லைட்டா மேல ஏற தொடங்கறப்பலாம் ஜிஎஸ்டி, அடுத்து 370 நீக்கம், அடுத்து சிஏஏ ன்னு தொடர்ந்து நாடு முழுக்க கொதிநிலைலயே இருக்கவும் பொருள்ளாதரம் சீரா ஒரே வேகத்துல இறங்கிட்டுருக்கு. சரி எதுக்கு இதெல்லாம் சொல்றன்னா முழுக்க முழுக்க தோல்வி அடைஞ்ச திட்டமான பணமதிப்பு நீக்கத்தை இப்பவரை ஒத்துக்காம அந்த தினத்தை கருப்பு பண ஒழிப்பு தினமா கொண்டாடி வெறுப்பேத்திட்டுருக்க பாஜக பிரதமர் மோடி அவர்களுக்கு ஒருவேளை இந்த திட்டம் மோசமானதுன்னு அமுல்படுத்துறதுக்கு முன்னமே தெரிஞ்சுருந்தா என்ன நடந்துருக்கும்?
இந்த ‘ஒருவேளை’ ங்கறத வச்சு நிஜ சம்பவங்கள்ல இருந்து நிறைய கதை உருவாக்கலாம். தசாவதாரம் படம் கூட சுனாமி வந்த்தை நல்லதுக்கா பாக்கறதுக்கு ஒருவேளை இப்படி நடந்துருந்துன்னானு உருவாக்கும் கதைதானே? அப்படி இந்த பணமதிப்பு நீக்கம் அறிவிக்கறதுக்கு முன்னமே தடுக்க பட்டுருக்கனும்னா என்ன நடந்துருக்கனும்ன்னு பின்னப்பட்டதுதான் இந்த கதை “மெஜந்தா”.
சமீபத்துல வெட்டாட்டம் நாவல் இது மாதிரி கடந்த ஒரு வருசத்துல நடந்த எல்லா சம்பவங்களையும் தொகுத்து இதே ” ஒருவேளை ” பாணில யோசிச்சு எழுதி பெரும் வெற்றி பெற்று, நோட்டா ங்கற பேர்ல படமாவும் வந்த்து. இநத புத்தகம் 2017 லயே வந்துருக்கலாம்னு தோணுது.
தமிழ்நாட்ல ஒரு வங்கிக் கொள்ளைல தொடங்கற கதை பிரதமர் வரை போய் நாட்டோட தலையெழுத்தையே மாத்துது. எப்படி என்னனுலாம் சொல்லக்கூடாது. சஸ்பென்ஸ் போயிரும்.
120 பக்கம்தான். ஒன்னரை மணி நேரத்துல முடிச்சுட்டேன். நல்ல விறுவிறுப்பு. ஆனா எனக்கு என்னனா ரொம்ப ராவா இருக்க மாதிரி இருந்த்து. ஒரு இடத்துல கூட ரிலாக்ஸ் ஆகிக்க முடியலை. தொடர்ச்சியா ஓடிட்டே இருக்க மாதிரி பரபரப்பாவே இருந்த்து. கொஞ்சம் ஹியுமர் வச்சுருந்துருக்கலாம். அது இல்லாதது குறை இல்லை. ஆனா மனசு தன்னை போல வெட்டாட்டத்தோட ஒப்பிட்டு தொலைக்குது. ஆனா கீழயே வைக்கலை, ஒரே சிட்டிங்ல படிச்சு முடிச்சுட்டேன். முடிக்கனும்னுலாம் நினைச்சு ஆரம்பிக்கலைங்கறதுதான் சிறப்பு.
இன்னொன்னு என்னன்னா எப்பவும் யாராவது ஒரு ஹீரோவாலதான் எல்லாமே மாறுது. அது மட்டும்தான் சினிமாப்பாணில இருக்கு. ஒருவேளை சினிமாவ எடுக்கறதுக்காக எழுதப்பட்டுருந்தா சரிதான். அப்படி யாரையும் மையப்படுத்தாம எல்லா சம்பவங்களும் திட்டமிடாம நடக்கறது மாதிரி கடைசியா அவங்க சிக்கறதும் இருந்துருந்தா வித்தியாசமா இருந்துருக்கும். ஏன்னா எல்லா கதைகளையும் முடிச்சு வைக்க ஒரு நேர்மையான போலிஸ் அதிகாரி தேவைப்படறது ரொம்ப பழகுன விசயமா இருக்கு.
ஏகப்பட்ட தகவல்கள். எதுவுமே போரடிக்கலை. சுருக்கமானா வாசகங்கள். அதனாலதான் 120 பக்கங்கள்ல புத்தகத்தை முடிக்க முடிஞ்சுருக்கு. இப்படி டிரிம் பண்ணவே நிறைய உழைப்பு தேவைப்பட்டுருக்கும்.
எனக்கு என்ன ஒரு வருத்தம்னா மோடியையும் அமித்ஷாவையும் பிரிச்சு காட்டுனதுதான். அர்ஜுனனையும் கிருஷ்ணனையும் பிரிக்கலாமா?
வேகமாக விறுவிறுப்பா படிக்க ஒரு புத்தகம் வேணுமா? தாராளமா இதை படிங்க