நடுநாட்டுச் சிறுகதைகள்

Publisher:
Author:

450.00

Nadunattu Sirukathaikal நடுநாட்டுச் சிறுகதைகள்
நடுநாட்டுச் சிறுகதைகள்

450.00

Nadunattu Sirukathaikal

 

தமிழ்ச் சமூகம் சாதியக் கட்டமைப்பைக் கொண்ட சமூகமாக நிலவுவதால் தமிழ்ப் பண்பாடு என்பது தமிழில் நிலவும் சாதிகளின் பண்பாடாகவும் அமைவதைக் காணலாம். இச்சாதியப் பண்பாடு
கடந்து வட்டார அளவிலான பண்பாடு, பழக்க வழக்கங்கள், பண்டைய தொல்குலக்குழுப் பண்பாடு முதலானவையும் தொடரத்தான் செய்கின்றன. இந்நிலையில், இப்படி நிலவும் இவ்வனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய நடவடிக்கைகளையே நாம் நடுநாட்டுப் பண்பாடு என்கிறோம். இத்துடன் இவ்வெல்லைப் பகுதிக்குள் வாழும் மக்களின் பேசும் மொழியும் பண்பாடும் பழக்கவழக்கங்களும்கூட நடுநாட்டு அடையாளங்களாகக் கருதப்படுகின்றன.
மொழிசார் கலைகள் பலதரப்பட்டவையாக விளங்கினாலும் அவற்றுள் முக்கியப் பாத்திரம் வகிப்பது சிறுகதைகளும் கவிதைகளும் நவீனங்களும் ஆகும். இவற்றுள், சிறுகதை என்னும் வடிவத்தை மட்டும் அடையாளப்படுத்தி, அதற்கு முக்கியத்துவம் தந்து தொகுக்கப்பட்டதுதான் இந்த நடுநாட்டுச் சிறுகதைத் தொகுப்பு.
– இராசேந்திரசோழன்

Delivery: Items will be delivered within 2-7 days