PAATTU SALAI
சொந்த ஊர் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மலையடிக்குறிச்சி. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் இளநிலை அறிவியல் படிப்பு. 1990ல் ‘தினகரன்’ நாளிதழில் பயிற்சி நிருபர். பின்னர் ‘போலீஸ் செய்தி’, ‘மின்மினி’, டி.ராஜேந்திரின் ‘உஷா’, ‘குங்குமம்’, ‘தினமலர்’ இதழ்களில் பணி. இப்போது ‘வண்ணத்திரை’ சினிமா வார இதழில் தலைமை நிருபராக பணியாற்றுகிறார். புத்தக வடிவில் வரும் இவரது முதல் படைப்பு இது.
நூல் குறிப்பு:
‘வண்ணத்திரை’ சினிமா வார இதழில் சுமார் இரண்டு வருடகாலம் தொடர்ச்சியாக வெளிவந்த தொடரின் நூல் வடிவம் இது. சினிமாத்துறையில் இருப்பவர்களே அறியாத பல அரிய தகவல்களை தேடித்தேடி தொகுத்திருக்கிறார் மூத்த சினிமா நிருபரான நெல்லை பாரதி.
தமிழ் திரையிசைத் துறையை கேப்ஸ்யூல் வடிவில் இந்நூலில் அடக்கியிருக்கிறார் என்பது வெறும் பாராட்டல்ல. நிஜம். திரைப்படப் பாடல்களில் விருப்பம் கொண்டவர்களும், பாடலாசிரியராக வர விரும்புபவர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது..
Reviews
There are no reviews yet.