பறவைகள் நிரம்பிய முன்னிரவு

Publisher:
Author:

80.00

பறவைகள் நிரம்பிய முன்னிரவு

80.00

 

நல்ல கவிதைகளை ரசிக்க சூழலியல் , அரசியல், மொழியறிவும் தேவை என்றாகிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் அடுக்கிலிருந்து மீண்டும் எடுத்து வாசிக்கத் தூண்டும் தொகுப்பாக சமயவேல் எழுதிய ‘பறவைகள் நிரம்பிய முன்னிரவு’ இருக்கிறது. அவரின் மொழி ஆளுமை வியக்க வைக்கிறது..

எளிய உடையில் அசரடிக்கும் அழகிகள் அடிக்கடி தெருவில் கடப்பதில்லை.
பால்தான் என்றே அருந்தினால் கள்ளின் சுவையில் மாச்சர்யம் தரும் கவிதைகள் பார்ப்பதற்கு சாதாரணமாக இருக்கின்றன. “எல்லாம் ஒரேவொரு கனமழைக்குப் பிறகு”என்பது போன்ற வரிகள் தலையில் குளிர்நீரைக் கவிழ்த்துகிறது..

“ஒரு கேம்லின் பென்சிலை வைத்துக் கொண்டு தாவரவியலை எதிர்கொண்ட அவரின் பால்யம்” கவிதைகளுக்கு சித்திரத் தன்மையை தந்துவிடுகிறது.
குழந்தைமையை தக்க வைக்கவே அவர் படும்பாட்டில் கவிதைகள் கால் கைகளை உதைத்துக் கொண்டு திருவிழாவில் பஞ்சுமிட்டாயை முகமெங்கும் அப்பி நிற்கின்றன.
வாசிப்பவனை கடலில் திமிங்கிலங்கள், பென்சிலோடு தத்தளிக்க வைக்கின்றன.
பனங்காடைகள், கருவண்டுகள், நல்ல பாம்புகள், காக்கைகள், கிளிகள், அணில்களை கவிதையில் உலாத்த விட்டுள்ளார்.

‘அரசியல் இளைஞனை’ தனக்குள் சத்தமிடாமல் வைத்துக் கொண்டு கவிதைகளில் கொடிகளை தலைகாட்ட செய்வது சமயவேலின் நுட்பம்.
அடிநாதமாக கவிதைகளில் இருக்கும் பகடி ஒரு புன்முறுவலை அவ்வப்போது முகத்தில் ஏற்றுகின்றன..

“ஒரு கூச்சல், ஒரு அழுகை, ஒரு வீறிடல் சிறப்பான தருணத்தை அழித்துவிட முடியாது. ஏனெனில் ஒரு மகத்தான தருணமாகவே மகத்தானது இருக்கும்.”
சமயவேலின் கவிதைகளை வாசிப்பது மகத்தான தருணங்களில் ஒன்று..

– ஸ்டாலின் சரவணன் (முகநூலில்)

Delivery: Items will be delivered within 2-7 days