1 review for பிடி சாம்பல்
Add a review
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____₹25.00
சாம்பல்! சாம்பல்! சாளுக்கிய நாடு சாம்பலாயிற்று! சாளுக்கிய மன்னன் பிணமானான், களத்தில்! முடிவிலொரு பிடிசாம்பலானான்! முடிவிலொரு பிடி சாம்பல்! பாய்ந்து சென்ற திக்கெலாம் வெற்றி கண்ட வேந்தன், பராக்கிரம மிக்க பார்த்திபன், சாளுக்கிய திலகம் புலிகேசியும் போரில் தோற்றான்; அவனுடைய குருதி சாளுக்கிய மண்ணிலே குழைந்து கிடக்கிறது. வீர உரையாற்றி, வெற்றி முழக்கமிட்டு, பிடிபட்ட மன்னர்களை விரட்டிப் பேசிய, அவனுடைய வாயிலே இரத்தம்! புகழ் மாலை தாங்கிய உடலிலே, புண்! சாளுக்கிய நாடே! தீயிட்டனர் உனக்கு! தீய்ந்தது உன் எழில்! செல்வம் கருகி விட்டது. புகழ் புகைந்து போயிற்று. மாடமாளிகைகளிலே நெருப்பு! மண்டபங்களெல்லாம் மண்மேடுகளாயின. அழிந்தது கோட்டை. மிகுந்தது என்ன? எதிரியிட்ட தீ, தன் பசி தீர சாளுக்கிய நாட்டைத் தின்று தீர்த்தான பிறகு, மிச்சமானது என்ன? சாம்பல்! ஆம்! சாளுக்கிய நாட்டின் கதி இதுவாயிற்று. பிடி சாம்பல்! முடிவிலோர் பிடி சாம்பல்!”
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
பரிசு பெற்ற நூல்கள் / Award Winning Books
Kmkarthikn –
பிடி சாம்பல்
அறிஞர் அண்ணா
பூம்புகார் பதிப்பகம்
சில நாட்களாகவே அண்ணாவைப் படிக்க வேண்டுமென்று ஆவலில் இருந்தேன். இது எப்படி bookmybook.inக்குத் தெரிந்ததோ தெரியவில்லை. நான் கேட்டிருந்த எட்டு புத்தகங்கள் போக மேலும் இரண்டு புத்தகங்களை அன்பளிப்பாக அனுப்பியிருந்தார். அதில் ஒன்று தான் இந்த பிடிசாம்பல் என்னும் அண்ணாவின் சிறுகதைத்தொகுப்பு. நானே தேடி வாங்கியிருந்தாலும் இப்படி ஒரு புத்தகத்தை தேடி எடுத்திருப்பேனா சந்தேகம் தான்.
“இங்கிவனை யாம் பெறவே” மொமண்ட்.
மொத்தம் மூன்று சிறுகதைகளைக் கொண்டது இந்த புத்தகம். சிறுகதைகள் ஒவ்வொன்றும் குறுநாவல்கள் அளவுக்கானது. ஒவ்வொரு சிறுகதைகளின் பேசு பொருள் நடந்தேறிய வரலாறுகள். அந்த வரலாறுகளில் நிகழ்ந்த பெரிதும் பேசப்படாத கண்ணுக்குப் புலப்படாத துரோகங்களை அண்ணா அவர்களின் கை வண்ணத்தில் வெளிச்சமிட்டு காட்டுகிறார். சில கற்பனை பாத்திரங்களைப் புகுத்தியும், புராண நூல்களைத் துணைகொண்டும் இந்த வரலாறுகளை தன் பார்வையில் பதிந்திருக்கிறார்.
முதல் சிறுகதை – பிடிசாம்பல்.
பல்லவ – சாளுக்கிய பகையைப் பற்றி பேசுகிறது. பல்லவ அரசன் நரசிம்மன். அவரது படைத்தளபதி பரஞ்ஜோதி. பரஞ்ஜோதி வாதாபியை முற்றுகையிட்டு வெல்கிறான். சாளுக்கிய அரசனான புலிகேசியையும் கொன்றழிக்கிறான். இதனால் பரஞ்ஜோதியின் புகழ் பல்லவ நாடெங்கும் எதிரொழிக்கிறது. மன்னரின் புகழை விட மேலோங்கி இருக்கிறது பரஞ்ஜோதியின் புகழ். இதை அண்ணா அவர்கள் எழுத்தாற்றலில் விவவரிக்கும் விதம் நம்மை பல்லவ நாட்டின் குடிபடைகளாகவே மாற்றிவிடுகிறது. பாகுபலி படத்தில் அமரேந்திர பாகுபலியாகிய நான் எனும் வசனம் வரும் காட்சி இந்தக்கதையிலிருந்தே காப்பியடிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இங்கே தான் சைவம் – வைணவம் காழ்ப்புணர்ச்சி மீண்டும் உயிர்ப்பெறுகிறது. பரஞ்ஜோதி சைவன். அதனால் வைணவர்கள் அவன் மேல் பெரும் கோபம் கொள்கிறார்கள். பல சூழ்ச்சிகளைச் செய்து அவனை அரசவையை விட்டு வெளியேற்றுகிறார்கள். மீண்டும் பாகுபலி ஞாபகம் தெய்வம் கோயில விட்டு நம்ம கூட இருக்க வந்துருச்சுடே. கொண்டாடுங்க என்றொரு வசனம் வரும் அந்தக் காட்சியும் அப்படியே பொருந்துகிறது. பரஞ்ஜோதி இல்லாத படை இறுதியில் என்ன ஆனது என்பதை வரலாறு அறிந்தவர்கள் அறிவார்கள். அறியாதவர்களுக்கு இந்த புத்தகம் சிறந்த கருவி. இந்த வரலாற்றுக் கதையில் பல்லவ – சாளுக்கிய பகை, பல்லவன் – பரஞ்ஜோதி மனக்கிலேசம் இவைகளை விட சைவம் – வைணவம் தான் முக்கியபங்காற்றியிருக்கிறது என பெரியபுராணத்தின் துணை கொண்டு நிறுவுகிறார். இந்தச் சிறுகதையைப் பற்றி ஒரே வார்த்தைல சொல்லணும்னா பட்டாஸ்.
அடுத்த கதை – ஒளியூரில்
நாலந்தா பல்கலைக்கழகத்தின் தோற்றம், வளர்ச்சி, அழிவைப் பற்றி பேசுகிறது இந்தக்கதை. நாலந்தா பல்கலைக்கழகத்தோடு சேர்ந்து பெருகும் புத்த மார்க்கத்தின் புகழ் பொறுக்கமாட்டாமல் புராதன மார்க்கத்துக்காரர்கள் என்ன ஒரு அழிவுச்செயலை செய்து நாலந்தாவை தீக்கிறையாக்கினார்கள் என்பதை ஒரு காதல் கதையோடு சேர்த்து சொல்லியிருக்கிறார். இந்தக் கதையை நம்ப மறுக்கிறது புத்தி. உண்மை என்ன என்பதை அறியாமல் செவிமடுப்பது நியாயமில்லை என்று தோன்றுகிறது. இருந்தாலும் இப்படி நடக்கறதுக்கும் வாய்ப்பிருக்குன்னு தான் தோணுது.
கடைசிக்கதை – தஞ்சை வீழ்ச்சி
ஏற்கனவே காவல் கோட்டம் நாவல்ல மதுரை மன்னன் சொக்கநாதன் தஞ்சை மீது போர்தொடுத்த வரலாறை படித்திருக்கிறேன். இந்தக்கதை அதிலிருந்து தொடங்கி சிவாஜியின் தம்பியான வெங்காஜியின் பிஜய்ப்பூர் அட்சியின் கீழ் தஞ்சை எப்படி சென்றது எனும் வரலாற்றை சுருங்கச் சொல்கிறது. சொக்கநாதன் தஞ்சை மீது போர்தொடுத்து விஜயராகவனை வெல்கிறான். பின் தன் தம்பி அழகிரியிடம் தஞ்சையை ஒப்படைத்து விட்டு மதுரைக்குச் சென்றுவிடுகிறான். அழகிரி எப்படி சூழ்ச்சிக்கும் நயவஞ்சகத்துக்கும் பலியானான் என்பதை விஷமேரும் வேகத்தில் சொல்கிறார். கண்டிப்பா இந்தக்கதையை சு.வெ ஒரு வாட்டி படிச்சறது நல்லதுனு சொல்லுவேன். ஏன்னா அவ்ளோ தகவல்கள் அடங்கியிருக்கு. மீண்டும் ஒரு பட்டாஸ்.
ரசனைக்காக எழுதுவதை, கவலையை மறப்பதற்காக கற்பனையில் சிறகடித்துப் பறப்பதையெல்லாம் இலக்கியமாக ஒருக்காலமும் அங்கிகரிக்க முடியாது. படிப்பதற்காக மட்டுமல்ல படிப்பினை பெறுவதற்காகவும் அந்த இலக்கியம் மக்கள் சமுதாயத்திற்கு பயனுடையதாய் இருக்க வேண்டும். எனும் பூம்புகார் பதிப்பகத்தார் இந்த நூலுக்குக் கொடுத்திருக்கும் முன்னுரை கனகச்சிதம்.
#Kmkarthikeyan_2020-46