Be the first to review “புதிய தமிழகம் படைத்த வரலாறு”
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
Subtotal: ₹10,068.00
Subtotal: ₹10,068.00
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____
₹140.00 Original price was: ₹140.00.₹130.00Current price is: ₹130.00.
1947 ஆகஸ்டுப் பதினைந்தில் பிரிட்டிஷாரின் பிடியிலிருந்து பாரதப் பொருநாடு விடுதலைபெற்ற போது, அதன் ஒரு பகுதியான தமிழ்த் திருநாடும் சுதந்திர வாழ்வைப் பெற்றது. இருநூறு ஆண்டு காலம் பிரிட்டனுக்கு அடிமைப்பட்டிருந்த காலத்திலே, தமிழகத்தில் தமிழர் ஆட்சி நடக்கவில்லை. ஆனால், பாரத தேசம் விடுதலை பெற்ற பத்தாண்டுகளுக்குள், தமிழ் வழங்கும் பிரதேசம் தனியரசு மாநிலம் ஆனது. தமிழகத்தின் வரலாற்றிலே இது ஒரு புதுமை. அந்தப் புதுமையை நிகழ்த்தப் பொறுப்பேற்றது தமிழரசுக் கழகம். பாரதம் விடுதலை பெற்றிருந்த தருணத்திலே சுதந்திர இந்தியாவில் சுயாட்சித் தமிழகம் படைக்கப் போவதாகச் சூளுரைத்தது தமிழரசுக் கழகம். அதற்காக, 1946-ல் தொடங்கி 1961 வரை பல போராட்டங்களை நடத்திப் புதிய தமிழகத்தைப் படைத்தது. அந்தப் புதிய தமிழகம் பிறந்த வரலாறு இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால், வடகெல்லையை மீட்பதற்காகவும், “மெட்ராஸ் ஸ்டேட்” என்னும் அவமானப் பெயரை அகற்றி, “தமிழ் நாடு” என்னும் தன்மானப் பெயரை வைக்கவும் நடந்த போராட்டங்கள் இந்நூலில் மிகவும் சுருக்கமாக தான் கூறப்பட்டுள்ளன. அவற்றைப்பற்றித் தனியாக ஒரு நூலை எழுதி வெளியிட எண்ணியுள்ளேன். இந்நூல் புதிய தமிழகம் படைத்த வரலாறாக மட்டுமல்லாமல், அதற்காக அரும்பாடுபட்ட தமிழரசுக் கழகத்தின் வரலாறாகவும் அமைத்திருக்கிறது. இன்று நாம் காணுகின்ற புதிய தமிழகம் தானே தோன்றியதன்று; தமிழினத்தார் போராடித் தோற்று வித்ததாகும். இந்த உண்மையை எதிர்காலத் தலைமுறையினருக்கு உணர்த்துவதற்காகவே இந்த நூலை எழுதி வெளியிட்டுள்ளேன். தமிழினத்தார் படித்துப் பயனடைவார்கள் என்று நம்புகிறேன். ம.பொ.சிவஞானம்.
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
பரிசு பெற்ற நூல்கள் / Award Winning Books
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
Reviews
There are no reviews yet.