ஊரின் கண்மாய், புரப்பட தயாராக நிற்கும் புளியமர ரயிலாக நீண்டு கிடக்கும் கண்மாய்க்கரை, ஊருணிகள், கிணறுகள், ஆலமரங்கள், பழந்தின்னி வௌவாள்கள் நிரம்பிய அத்தி, அரசமரங்கள், பால் வடியும் முதிர் வேப்பங்கன்னிகள், பாம்புகள் நெலியும் கோவில்கள், பேய்கள் தெலாப்போட்டு இரைக்கும் அழிந்த நந்தவனங்கள், மூக்கையாரெட்டியார் போன்ற நூறு வயதை எட்டிய எனது மூத்த நண்பர்கள், நெஞ்சுக்குள் மத்தாப்பு கொளுத்தும் பெரிய கார்த்திகை. ஊர் முழுவதும் கூடி ஆலமரங்களின் அடியில் அமர்ந்து பலவகைக் கஞ்சிகளைக் குடிக்கும் லடகத்தியம்மன் கஞ்சி, சேத்தாண்டி வேஷம் போட்டு ஆஹோ அய்யாஹோ போகும் உத்தண்டசாமி கோவில் பங்குனிப் பொங்கல் போன்ற எங்கள் எளிய திருவிழாக்கள் என்று எவ்வளவு ஞாபங்கள்?
புனைவும் நினைவும்
Publisher: மணல்வீடு Author: சமயவேல்₹100.00
கவிஞர் சமயவேல் தன்னுடைய பால்யகால வாழ்வினை மலரும் நினைவுகளாக படைத்துள்ளார். கட்டுரைகளைப் படிக்கும் வாசகர் எது நினைவு எது புனைவு என்றறியாத தவிப்பில் இருக்க வேண்டும் என்ற படைப்பாளியின் விருப்பம் இனிதே நிறைவேறியுள்ளது. கனடா வாழ் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் “உண்மை கலந்த நாட்குறிப்புகள்” நூல் ஏற்படுத்திய அற்புதத்தை சமயவேலின் நினைவும் புனைவும் நூல் சாதித்துள்ளது. ஆங்கிலத்தில் சார்லஸ் லாம் (Charles Lamb) என்ற பதினெட்டாம் நூற்றாண்டு எழுத்தாளர் எலியா என்ற புனைப்பெயரில் எழுதிய கட்டுரைகளுக்கு இணையானவை சமயவேலின் கட்டுரைகள். சார்ல்ஸ் லாம் கட்டுரைகளிலும் நினைவுக்கும் புனைவுக்கும் இடையிலான இத்தகு மயக்கம் நிலவுகிறது..
வெம்பூர் மக்களின் பழக்க வழக்கங்கள், சாதிய கட்டுமானங்கள், திருவிழாக்கள், மழை பொய்த்ததால் ஏற்பட்ட பஞ்சம், நிலவுடைமைக் கலாச்சாரத்தின் இறுக்கமான பாலுறவுக் கட்டுப்பாடுகள், ஆண் மையச் சமூகத்தில் ஆண்களின் பாலியல் வக்கிரங்களுக்கு பெண்கள் பலியாவது, விவசாயம் தழைக்காமல் கிராமத்தைவிட்டு நகரத்தை நோக்கி புலம் பெயர்வது, இறந்தோருக்கான சடங்குகள் எந்தவித மாற்றமுமின்றி காலங்காலமாகத் தொடர்வது பற்றியெல்லாம் உள்ளதை உள்ளவாறே எடுத்துரைக்கிறார்..
கவிஞரான சமயவேலின் உரைநடையும் கவித்துமானதாக இருக்கிறது. வெம்பூர் தமிழக கிராமங்களின் ஒரு அடையாளமாகும். இந்தியாவின் பண்பாட்டு பெட்டகங்களாக அதன் கிராமங்கள் இருப்பதை வெம்பூர் உறுதிப்படுத்துகிறது..
– பேரா.பெ.விஜயகுமார்
– புத்தகம் பேசுது
Delivery: Items will be delivered within 2-7 days
Reviews
There are no reviews yet.