‘புத்தம் வீடு’ – எளிய மொழியில் சொல்லப்பட்ட காதல் கதையாகத் தோற்றம்கொள்ளும் நாவல்.
லிஸியும் தங்கராஜும் இளம்பருவத்தில் கொண்ட ஈர்ப்பு காதலாக முதிர்ந்து திருமணத்தில் கனிய நீண்ட காலம் காத்திருக்கிறார்கள். தடைகளைக் கண்டு அஞ்சுகிறார்கள். இறுதியில் இணைகிறார்கள். முதல் சந்திப்புக்கும் முதல் நெருக்கத்துக்கும் இடையில் வருடங்கள் கடந்து போகின்றன. இடங்கள் மாறுகின்றன. மனிதர்கள் கடந்து போகிறார்கள். அவர்கள் உறவாடுகிறார்கள். காசுக்காகத் தகப்பனை ஏய்க்கிறார்கள். பகைகொண்டு சொந்தச் சகோதரனையே கொல்கிறார்கள். குலப்பெருமை பேசுகிறார்கள். புதிய தலைமுறையோடு பிணங்குகிறார்கள். காலத்துக்கேற்ப மாறுகிறார்கள்.
இது லிஸியின் கதை. மூன்று தலைமுறைகளை இணைக்கும் கண்ணி அவள். அவளை மையமாகக் கொண்டு விரியும் கிராம உறவுகளின் கதை. ஆர்ப்பாட்டமில்லாமல் வெளிப்படும் அவளுடைய சிநேகச் சரடின் மறுமுனையில்தான் அவளைத் தூற்றியவர்களும் விரும்பியவர்களும் இயங்குகிறார்கள்.
படைப்பு இயல்பால் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட இலக்கிய ஆக்கங்களில் ஒன்று ‘புத்தம் வீடு’. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்பு எழுதப்பட்டது. எனினும் இன்னும் வாசிப்பில் சுவை குன்றாமல் துலங்குகிறது. 
புத்தம் வீடு
Publisher: காலச்சுவடு பதிப்பகம் Author: ஹெப்ஸிபா ஜேசுதாசன்
  ₹190.00 Original price was: ₹190.00.₹180.00Current price is: ₹180.00.
Delivery: Items will be delivered within 2-7 days
	
	
		SKU: VC 597
	
	Categories: Special Offers / சிறப்பு தள்ளுபடிகள், அனைத்தும் / General, இலக்கியம் / Literature, நாவல் / Novel
	Tags: காதல், காலச்சுவடு பதிப்பகம், ஹெப்ஸிபா ஜேசுதாசன்
	
	Description
Reviews (0)
Be the first to review “புத்தம் வீடு” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
அனைத்தும் / General

மு.க - வெறும் வாழ்க்கை வரலாறல்ல, ஒரு Scan report						


Reviews
There are no reviews yet.