ரவிக்கைச் சுகந்தம்

Publisher:
Author:

90.00

ரவிக்கைச் சுகந்தம்

90.00

Ravikkaich Sugantham
John Sundar

 

ஜான் சுந்தரின் பியானோ வெட்கமில்லாதது. ஆனால் அவர் சமதளப் படிகளில் இறங்கும் வித்தை தெரிந்த பியானோக் கலைஞன். பேருந்தில் நம் மடியிலிருக்கும் மரக் கன்றைத் தயங்கித் தொடும் சிறுமி, ஒரு கணத்தில் அவளைத் தொடத் தளிர்க் கை நீட்டும் மரக்கன்று; இரண்டும் அவர். சடுதியில் ஐந்து மார்புகள் முளைக்கும் பெண்ணின் சித்திரம் அவர் நடுச் சுவரில் வரைந்த ஒன்று. கணத்தைப் புழுதியில் புரட்டித் தின்னத் தரும் அவருடைய வரிகள் அந்தரவெளிகளில் செபியாவைத் தேடுகின்றன. இது அவருடைய செபியா நிறச் சொந்த ரயில். செபியா நிற பிஸ்கட் நிலா. செபியா நிறச் சுகந்தம். மற்றும் செபியா நிறச் செபியா. -கல்யாண்ஜி தனித்திருப்பவனின் காதில் திடீரென விழுந்து சூழலை மாற்றும் தேன்சிட்டின் கூரிய கீச்சொலிகள்போல, வாசிப்பவரின் எல்லாப் புலனுக்குள்ளும் நுழைந்து நலம் விசாரித்து அமைதி படர்த்தும் கவிதைகள் இவை. அப்படியொரு கனவமைதிக்குள் ஆழும்போது, காகங்களின் மரண கானாபோல மனம் பேதலிக்கச் செய்பவர்கள் ஜான் சுந்தரின் கவிதை மனிதர்கள். கடக்கும் ஒவ்வொரு இறந்த கணமும் நிகழ்வுகளைக் கறுப்புவெள்ளை நினைவு களாக்குவதை செபியா டோன் படங்களாக்கிக் காலாதீதம் தாண்ட செபியா குதிரையேறும் ஜான் சுந்தர், ஒலிவாங்கியை அரங்கம் ருசிக்கும் ஐஸ்க்ரீமாக்கும் தேர்ந்த இசைஞனும் கவிஞனுமாகயிருப்பது தமிழின் கொடுப்பினை.

கலாப்ரியா 

Delivery: Items will be delivered within 2-7 days