அஞ்சனக்கண்ணி

Publisher:
Author:

120.00

அஞ்சனக்கண்ணி

120.00

Anjanakkanni 
 Sahana

 

கவிஞர் என்ற தொழில்நெறியாளர் அபூர்வமாகச் சென்று சேரும் இடங்களைக் கவிதையின் தாதுநிலையில் சஹானா பிடித்திருக்கிறார். இயற்கைக்கு மிக அருகிலிருக்கும்போது உணரும் பேதமற்ற தன்மையையும் எல்லையற்றது தரும் தவிப்பையும் எதுவும் தீராத போத உணர்வையும் இந்தக் கவிதைகள் இயற்கையாக இறகுகளைப் போலச் சுமக்கின்றன; தித்திப்புடன் சுவைக்கின்றன. -ஷங்கர்ராமசுப்ரமணியன் ‘அவ்வளவு பெரிய மலைகளைப் பார்க்கும் சின்னக் கண்களுடன்’ சஹானாவாக வேண்டும்; அன்றாடங்களின் வழமைகளை உதறி சஹானாவைப்போல ஒரு மீனாக வேண்டும் என்றெல்லாம் தோன்றுகின்றன இத்தொகுப்பைப் படித்தால். சூழலியலுக்கும் சஹானாவுக்கும் ‘பூனையின் மீசை’ அளவுக்குக்கூட இடைவெளி இல்லை. எல்லாமுமாக அவள் மாறிப்போவது அற்புதமாக இருக்கிறது. சஹானாவின் கவிதைகள் வழியாகக் கேட்பது பலநேரம் ஒரு குழந்தைமையின் தூய இசைக்குரல், சிலநேரம் தேர்ந்த தாயின் மெல்லிய கேவல். உண்மையில் சஹானாவின் அந்தச் சின்னக் கண்கள் வழியாக இந்தப் பெரிய வாழ்க்கையை, இயற்கையைப் பார்க்க வேண்டும். இன்னும் நிதானமாக ஒரு பூனையைப்போல வாசிக்க வேண்டும் மறுபடியும்… மறுபடியும்…

_சந்தோஷ் நாராயணன் -ஓவியர்

Delivery: Items will be delivered within 2-7 days