Soodhadi
மிகவும் கேவலமான என்னுடைய தற்போதைய இழிநிலையை நான் எவ்வளவு நன்றாய் உணர்கிறேன் என்பதை மட்டும் இவர்கள் அறிவார்களாயின், இவர்கள் என்னைத் தூற்ற இப்படி முன்வரமாட்டார்கள். ஏற்கனவே எனக்குத் தெரியாத எந்தப் புதிய விஷயத்தை இவர்கள் எனக்குச் சொல்லப்போகிறார்கள் என்று கேட்கிறேன். இங்குள்ள விவகாரம்தான் என்ன? விவகாரம் இதுதான்: சக்கரத்தின் ஒரேயொரு சுற்றால் யாவும் தலைகீழாய் மாறிவிடும்; எனக்கு இப்பொழுது புத்திமதி கூற வருகிறார்களே இதே ஆட்கள் அப்பொழுது எல்லோருக்கும் முதலாய் (இதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை) என்னிடம் ஓடிவந்து சிரித்து மகிழ்ந்து பேசுவார்கள், வாழ்த்துரைப்பார்கள். இப்பொழுது செய்கிறார்களே அதுபோல அப்பொழுது யாரும் என்னைப் பார்த்ததும் தூர விலகிச் செல்லமாட்டார்கள். இவர்களை எல்லாம் ஒரு பொருட்டாய்க் கருதுகிறவனல்ல நான்! இப்பொழுது நான் யார்? ஒரு பூஜ்யம்! நாளைக்கு நான் எப்படிப்பட்டவனாக முடியும்? நாளைக்கு நான் மாஜி மனிதன் என்னும் நிலையிலிருந்து மீண்டெழுந்து வந்து திரும்பவும் வாழத் தொடங்கமுடியும். என் நெஞ்சில் உறையும் மனித ஆன்மா இன்னும் அறவே அழிந்துவிடவில்லை எனில் நாளைக்கு நான் அந்த ஆன்மாவைத் தட்டியெழுப்பிச் செயல்பட வைக்கமுடியும்.
-ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி
Reviews
There are no reviews yet.