Srirangaththu Devadhaigal
‘தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்குறைய ஜீனியஸ்’ – துரைசாமி, கடவுளுக்கு கடிதம் எழுதும் கோவிந்து, ‘ராவிரா’ எனப்படும் ஆர்.விஜயராகவன்… என எல்லோருமே பிரமிக்க வைக்கும் கதாபாத்திரங்கள். கதை மாந்தர்கள், வெறும் பாத்திரங்களாக நமக்குத் தோன்றாமல், அவர்களோடு வாழ்ந்த ஓர் அனுபவத்தை ஏற்படுத்துவதுதான் சுஜாதாவின் எழுத்துக்கேயான தனிச் சிறப்பு. அந்த நிறைவைத் தருகிறது ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்.’
Sathish –
ஸ்ரீ ரங்கத்து தேவதைகள்
சுஜாதா
சிறுகதை தொகுப்பு
சுஜாதா ஒரு ஜனரங்க எழுத்தாளர் என்று தான் நான் கூறுவேன், என்னுடைய புத்தக வாசிப்பு பழக்கம் குறைந்த பின் மீண்டும் வாசிக்க தொடங்கையில் ஒரு சில எழுத்தாளர்கள் புத்தகங்களை வாசிக்க சிறிது சிரமமாக இருக்கும், அதை சரி செய்ய சுஜாதா புத்தகங்களை உடனே எடுத்து வாசித்து விடுவேன், அப்படி எடுத்து வாசித்தது தான் இந்த சிறுகதை தொகுப்பு,
இந்த புத்தகத்தின் மீதான என்னுடைய ஆர்வம் “ஈரம்” திரைப்படத்தில் “மழையே மழையே” என்னும் பாடல் காட்சியில் கதாநாயகன் ஆதி தன் காதலிக்கு இந்த புத்தகத்தை பரிசாக கொடுப்பர், அப்போதே ஆர்வம் வந்து விட்டது, தற்போது தான் வாசித்து முடித்தேன்,
மொத்தம் 14 சிறுகதைகள் கொண்டது, இதில் வரும் சிறுகதைகள் எல்லாம் சுஜாதாவின் சிறுவயதில் நடந்த சம்பவங்கள் மற்றும் அவர் பார்த்த கதாபாத்திரங்கள், சில உண்மையும் சில கற்பனையும் இந்த புத்தகம் என தொடக்கத்திலேயே அவர் கூறியிருப்பார்,
ஒவ்வொரு சிறுகதைகளும் கதையினுள் கதாபாத்திரங்களாய் இல்லாமல், கதாபாத்திரங்களின் கதையாக இருக்கும்.14 சிறுகதைகள் 14 கதாபாத்திரங்களாக சிறப்பிக்கும், அனுபவம் என்பது நாம் தேடி செல்வது தான் என இல்லாமல் நம்மை சுற்றி இருப்பவர்களை நாம் பார்த்தாலும் விவரம் இல்லாமல் நாம் கடந்து வந்ததை காலம் கடந்து நினைத்தாலும் கிடைக்கும் என உணர செய்கிறது, ஒவ்வொரு கதாபாத்திரமும்& கதையும் எப்படியாவது உங்களின் சிறுவயது செயலை அப்படியே நினைவுக்கு கொண்டு வரும், அவர் பார்த்த ஆட்களை நாமும் பாத்திருப்போம், அவர் செய்ததை நாமும் செய்திருப்போம், உதாரணத்திற்கு (கதையிலிருந்து) கிரிக்கெட் விளையாட 11 பேர் தேவை அதில் 9 பேர்க்கு தொடர்பு இருக்கும் இருவரை தவிர யார் அந்த இருவர்களாய் இருப்பார்கள் என்றால் Bat கொண்டு வருபவனும் Ball கொண்டு வருபவனும். இப்படி நிறைய நிகழ்வுகள் நம்மில் தொடர்பு படுத்தும், அதேபோல் ஒவ்வொரு கதாபாத்திரமும் மறக்கமுடியாமல் இருக்கும்.
– சதீஷ் சுப்ரமணியன்