ஸ்டீவ் ஜாப்ஸ் – ஆப்பிள் பசி

Publisher:
Author:

333.00

ஸ்டீவ் ஜாப்ஸ் – ஆப்பிள் பசி

333.00

ஸ்டீவ் ஜாப்ஸ். இன்றைய இளைஞர்களின் ஆதர்ச நாயகர். இவர் இறந்தபோது கண்ணீர்விட்டுக் கதறி அழுத பல இளைஞர்களைப் பார்த்தேன். அந்த அளவுக்கு அவர்களை வசீகரித்திருந்தார். செய்வதைத் திருந்தச் செய்ய வேண்டும் என்பதில் சமரசத்திற்கு இடம் கொடாதவர். தொழிலில் சிகரத்தைத் தொட்ட மனிதர்களில் பலர் அடித்தட்டு மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ததின் மூலமே அதிக அளவில் பணத்தைக் கல்லா கட்டினர். ஹென்றி ஃபோர்டு போன்றவர்கள் இதில் விதி விலக்கு. பணம் சம்பாதிப்பது ஒன்றை மட்டுமே குறிவைத்து தன் வியாபார உத்திகளை இவர்கள் வகுக்கவில்லை. ஒரு சாதாரண விவசாயி கூட சொந்தமாகக் கார் வைத்துக் கொள்ளக்கூடிய அளவிற்கு விலை மலிவானதாகத் தன் தயாரிப்பு இருக்கவேண்டும் என்பதில்தான் அவர் குறியாக இருந்தார். பில்கேட்ஸ் ஒவ்வொருவரும் தனக்கென்று ஒரு தனிக் கணினியை வைத்துக்கொள்ளும் நிலை ஒரு நாள் வரும் எனக் கணித்தார். அது உண்மையானது. வெற்றிபெற்றார். குறைவாக விலை வைத்து அதிக எண்ணிக்கையில் பொருட்களை விற்பதன் மூலம் விற்று முதலை அதிகரித்து அதன் மூலம் வெற்றிக் கொடி நாட்டினர் சிலர். தங்கள் இலக்கை அடைவதற்கு ஏற்ற திட்டங்களை வகுத்துக்கொண்டு செயல்பட்டு ஒவ்வொருவரும் வெற்றி பெற்றார்கள். அவர் வாழ்க்கை சறுக்கல்களும், சவால்களும், திகிலும் நிறைந்த ஒரு ரோலர் கோஸ்டர் பயணத்தைப் போன்று பரபரப்பும் சாகசங்களும் நிறைந்ததாக இருந்தது. இந்தியக் கலாச்சாரம் அவரை ஈர்த்தது. மனதிற்கு இதத்தை அளித்தது. அதனால் மன அமைதி தேடி இந்தியாவுக்குப் பயணங்கள் மேற்கொண்டார். அதற்குப் பின்னர் புதியவராய் வெற்றியாளராய் உலகத்தாரால் கொண்டாடப்பட்டார் என்றாலும், அதைத் தக்க வைத்துக்கொள்ள அவர் வாழ்நாள் முழுதும் போராட வேண்டியிருந்தது. .

Delivery: Items will be delivered within 2-7 days