அகுதாகவாவின் சிறந்த படைப்புகள் என்னை காத்துக் கொண்டிருக்கின்றன. எங்கள் இருவரது காலமும் ஆளுமைகளும் வேறு, வெவ்வேறு குரலில் குறிக்கோள்களில் நாங்கள் வார்க்கப்பட்டோம். நான் சொல்ல விரும்புவது என்னவெனி் மகுதாகவாவின் படைப்புகளிலிருந்து நான் நிறையக் கற்றுக் கொள்கிறேன். நமது வாழ்வின் பயணத்தினூடே அவர் வாழ்வின் தடத்தின் வெளிச்சத்தினைக் காண்கிறோம். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் ரியுனொசுகே அகுதாகவா இன்றும் ஜப்பானிய தேசிய எழுத்தாளராக வாழ்ந்தும் இயங்கியும் வருகிறார். ஜப்பானிய இலக்கியத்தில் அசைவற்ற ஒரு தனி நட்சத்திரமாகவும் நமது அறிவுத் தளத்தின் ஒரு பகுதியாகவும் திகழ்கிறார்.
சுழலும் சக்கரங்கள்
Publisher: நூல் வனம் Author: ரியுனொசுகே அகுதாகவா | தமிழாக்கம்: கே. கணேஷ்ராம்₹200.00
Suzhalum Chakkarangal
நவீன ஜப்பானியப் புனைவெழுத்தின் மிகச்சிறந்த ஆளுமை ரியுனொசுகே அகுதாகவா. அவரது பரிசோதனை முயற்சிகள் என்று சொல்லத்தக்க வெவ்வேறு பேசுபொருள்கள், வடிவங்களிலான கதைகளின் தொகுப்பு இது. புனைவில் தொடங்கி மிகுபுனைவில் முடிவது, கதைகளுக்குள் சம்பவங்களைக் கலைத்துப்போட்டுச் சொல்வது என வாழ்வு முன்வைக்கும் சந்தர்ப்பங்களை சுவாரஸ்யமாய்ச் சொல்கிறார் அகுதாகவா. ஜப்பானின் உயரிய இலக்கிய விருது அகுதாகவாவின் பெயரில்தான் வழங்கப்படுகிறது. அத்தகைய மேன்மை பொருந்திய முன்னோடியின் சிறுகதைகளைத் தமிழுக்குக் கொண்டுவந்ததில் கவனம் ஈர்க்கிறார் கணேஷ்ராம்.
Delivery: Items will be delivered within 2-7 days
Description
Reviews (0)
Be the first to review “சுழலும் சக்கரங்கள்” Cancel reply
You must be logged in to post a review.
Related products
அனைத்தும் / General
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
அனைத்தும் / General
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
பரிசு பெற்ற நூல்கள் / Award Winning Books
Reviews
There are no reviews yet.