கலகம் காதல் இசை

Publisher:
Author:

Original price was: ₹150.00.Current price is: ₹140.00.

கலகம் காதல் இசை

Original price was: ₹150.00.Current price is: ₹140.00.

மலையாளத்தில் மாத்ருபூமி இதழில் தொடராக வெளிவந்த இந்த கட்டுரைகள் இசை குறித்து இந்திய அளவில் எழுதப்பட்ட புத்தகங்களில் மிக முக்கியமானவை. தமிழில் சாரு நிவேதிதா அளவிற்கு இசை குறித்தும், இசை ஏற்படுத்திய சலனங்கள் குறித்தும் எழுதியவர்கள் யாருமில்லை. வெறுமனே இசை மற்றும் இசைக் கலைஞர்கள் பற்றிய சிலாகிப்போடு இந்த கட்டுரைகள் முடிந்துவிடுவதில்லை. மாறாக நமக்கு அந்நியமான பல இசைக்கருவிகளையும், அதன் பயன்பாட்டில் விளைந்த பல முக்கியமான இசைக்குறிப்புகள் பற்றியும் சாரு இந்த நூலில் விவரிக்கிறார். ஹோமர் தனது காவியங்களை சித்தாரா என்கிற நரம்புக் கருவியைக் கொண்டு இசைத்தபடித்தான் மேடையேற்றினார் என்கிறார் சாரு. இதன் வழியே நமக்கு பரிச்சயம் இல்லாத இசைக்கருவியும், வரலாற்றின் மிக முக்கியமான சம்பவங்களும் இசையின் வழியே பதிவு செய்யப்படுகிறது.

இசை என்பது வெறுமனே சினிமா பாடல்கள் என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கும் பெரும்பான்மையான மக்கள் வாழும் தேசத்தில், கலகம் காதல் இசை போன்ற நூல்களின் தேவை மிக அதிகம்.

Delivery: Items will be delivered within 2-7 days