Thamizhagathil Thevaradiyar Marabu – Panmuga Nokku
தேவரடியார் என்றும், கணிகையர் என்றும், வேசையர் என்றும், காலம் காலமாக இழித்துரைக்கப்படும் பெண்களின் புதைந்திருக்கும் வேர்களைத் தேடுகிறார் நர்மதா. இழிவுகள் எனும் முள்முடி அவர்கள் தலைகளில் இறக்கப்பட்டு, அவர்களின் ஜீவியத்தில் ஆணி அறையப்பட்ட அந்தத் தோற்றப் புள்ளியை ஆராய்கிறார் ஆசிரியர். எந்தப் புள்ளியில் இருந்து கலைஞர்கள் எனப்பட்ட அவர்கள் விலைமகளிர் எனக் கீழிறக்கப்பட்டார்கள் என்கிற தேடலை இந்தப் புத்தகம் முழுதும் நிகழ்த்தியிருக்கிறார் அவர். தேடல் என்பது, தெளிவை நோக்கியப் பயணம். உண்மையைக் கண்டடையும் நெறி என்றால், நர்மதாவின் பயணத்தில் அவர் இலட்சியத்தை அடைந்திருக்கிறார் என்று சொல்லலாம்.
– பிரபஞ்சன்
Reviews
There are no reviews yet.