வைகை நதி நாகரிகம்! ஒரு நகரத்தைப் பற்றியும் அங்கு நிலவிய ஒரு நாகரிகத்தையும் பற்றியது. எழுத்துகள், ஆவணங்கள், சான்றுகள், மரபுகள், சாட்சியங்கள், இலக்கியங்கள், காப்பியங்கள், ஆய்வுகள் யாவும் ஆதி மரபை நினைவுபடுத்தி, 2400 ஆண்டுகள் பழைமையான நம் நாகரிகத்தின் அடையாளத்தைப் பதிவு செய்கிறது. பாண்டிய, சேர, சோழர்களின் செல்வச் செழிப்பான வாழ்வைக் கண்டறிவதோடு கீழடி, தேனூர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட ஆவணங்கள்வழி யாரும் அறியாத பல தகவல்கள் ஆனந்தவிடனில் கட்டுரையாக வெளியாகி அவற்றை மக்கள் அறிந்துகொண்டனர். நம் பழம்பெரும் வரலாற்றை நாம் அறிய முற்படுவதும் இவற்றை வைத்துத்தான். காப்பியங்களைப் படித்த நாம் காப்பியங்களுக்குள் சென்று காணும் சூழலை இந்த நூல் ஏற்படுத்துகிறது. ஆதி மனிதன் ஓவியத்தின் வழியாக தனக்கான வாழ்வு நெறிகளை வகுத்துக்கொண்டான். அந்த ஓவியத்தைச் சுண்டக் காய்ச்சி எடுத்த வடிவமான எழுத்துகள்தாம் பழம்பெருமை பேசுகின்றன. இன்று நாம் சுலபமாக உரையாடும் எழுதும் வடிவத்துக்கு அவைதான் தாய் எழுத்துகள். வளர்ந்த நாகரிகத்தின் பழைமையான சாட்சியங்கள் பாறை ஓவியங்கள்தான். பல நூற்றாண்டைக் கடந்தும் ரோமானியக் கப்பல்கள் இருந்ததற்கான சான்றாக பானையின் கோட்டோவியங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நாட்டு வணிகமும் எவ்வாறு, எப்படி நடந்தது என்பதைப் பற்றியும் ரோமாபுரியைச் சேர்ந்த மண்பாண்டங்களும் வட இந்திய பிராகிருதப் பெயர்களுமாக வணிகமும் பண்பாடும் கைகோத்து நடந்த பெருநகரமாக விளங்கியது மதுரை மாநகரம் என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் நூல் ஆசிரியர் சு.வெங்கடேசன். காவியத்தில் வருகிற குறிப்புகளை வைத்து, அகழாய்வு நடத்தி கண்டறியப்பட்ட நகரத்தையே பூர்வீகப் பெயர்கொண்டு குறிப்பிட்டது ஏன்? காப்பியங்களின் வழி கிடைத்த நிலக்குறிப்பை அடிப்படையாக வைத்து மண்ணுக்குள் இருக்கும் நகரை ஆய்வாளர்கள் என்னவென்று குறிப்பிட்டார்கள் என்பன போன்ற கேள்விகளுக்கு விடை தருவதோடு, பழங்கால வைகை நாகரிகத்தை நம் கண்முன் காட்டும் அரிய பொக்கிஷம் இது.

வைகை நதி நாகரிகம் : கீழடி குறித்த பதிவுகள்
Publisher: விகடன் பிரசுரம் Author: சு.வெங்கடேசன்₹210.00
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையைச் சுற்றியும், வைகை நதிக் கரையிலும் நடைபெற்ற கீழடி அகழ் ஆய்வில் காலம் மறைத்துவைத்திருந்த அரிய பொக்கிஷங்கள் ஆச்சரியப்படத்தக்கவகையில் கிடைத்துள்ளன. இந்த அகழாய்வு, அதில் கிடைத்த பொருள்கள், அவை ஏற்படுத்தும் பிரமிப்புகள் குறித்து நூலாசிரியர் எழுதிய கட்டுரைத் தொடரின் தொகுப்பே இந்நூல். மேலும், கீழடி அகழாய்வு குறித்து சில இதழ்களில் வெளியான அவரது கட்டுரைகளும், நேர்காணல்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளன.
தேனூரில் கிடைத்த தங்கக் கட்டிகள், கடை சிலம்பு ஏந்தல் என்னும் கடச்சனேந்தல் கிராமத்தில் கோவலன் -கண்ணகி கடைசியாக வாழ்ந்த வீடு, வெம்பூர் குத்துக்கற்கள் வரிசை என கட்டுரைகள் ஒவ்வொன்றும் வரலாற்று நாவலுக்குரிய சுவையான நடையோடு படைக்கப்பட்டுள்ளதால் நம்மை அந்தக் காலத்துக்கே இட்டுச் செல்கின்றன. அவற்றுக்கு ஓவியங்களும், அகழாய்வுப் படங்களும் உதவிசெய்கின்றன.
மண்ணுக்குள் பரவிக்கிடக்கும் தமிழர்தம் தொன்மையான நாகரிகத்தை வெளிக்கொணர்வதில், கண்ணுக்குத் தெரியாமல் விரவிக்கிடக்கும் பல்வேறு நுட்பமான “அரசியல்’ வலைப்பின்னல்களையும், அதுகுறித்த தமது ஆதங்கத்தையும் துணிச்சலுடன் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.
நன்றி – தினமணி
Delivery: Items will be delivered within 2-7 days

English-English-TAMIL DICTIONARY
1777 அறிவியல் பொது அறிவு
வீட்டுக்கும் வியாபாரத்திற்கும் 160 சிற்றுண்டிகள், காரங்கள்
ARYA MAYA - The Aryan Illusion
Mother
21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்
21 ம் விளிம்பு
1975
5000 பொது அறிவு
Reviews
There are no reviews yet.