தந்தை பெரியாரைத் தமிழ் கூறும் நல்லுலகிற்குச் சாமி சிதம்பரனார் அறிமுகம் செய்தது போல், தமிழர் தலைவர் ஆசிரியரை முழுமையாக ஆவணப்படுத்திய நூல் இது என்பதால், என்றும் பேசப்படவேண்டிய நூல் என்பதால் இதன் அருமை பெருமைகளை அள்ளி, அள்ளிக் குவிக்கிறோம்.
கி.வீரமணியா? கடவுள் மறுப்பாளர் – தந்தை பெரியாருக்குப் பின், அன்னை மணியம்மையாருக்குப் பின் திராவிடர் கழகத்தின் தலைவராக விளங்கி வருபவர் என்று மட்டுமல்லாது, அவர் சாதனைகளைத் தமிழினத் திற்கு ஆற்றிய மகத்தான மிகப்பெரிய தொண்டை, தந்தை பெரியாரையே முன் நிறுத்தி, அவர் புகழ், பெருமைக்கொடி பறக்கச் செய்து, தந்தை பெரியாரை உலக மயமாக்கி, எல்லாவற்றிற்கும் மேல் தந்தை பெரியாரின் கொள்கைகளை மட்டுமல்லாது, தந்தை பெரியார் விட்டுச்சென்ற சொத்துக்களையும், சிதறாமல் காத்து வரும் பெருமை ஒன்று போதும்.
– முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்

கலைஞர் எனும் கருணாநிதி
மும்முனைப் போராட்டம் கல்லக்குடி களம் 


Reviews
There are no reviews yet.