ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு:
ஸ்லெட்டாவின் ஆசிரியை உதவியுடன் அவளுடைய நாட்குறிப்பு வெளியாகிப் பிரபலமடைந்தது.
UNICEF மூலம் இந்த நாட்குறிப்பு வெளியிடப்படும், ஏராளமான பத்திரிகையாளர்கள் அவளைச் சந்திக்க வந்தார்கள். இதனால் அவளும் பிரபலமடைந்தாள். அவள் தாயுடன் நாட்டை விட்டு வெளியேறி, பாரிசுக்கு போனாள்.
இந்த நாட்குறிப்பில் போரின் கொடூரம் ஒரு குழந்தையின் பார்வையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
“போரா?யாருக்கு வேண்டும் போர்! எங்களுக்குத் தேவை சமாதானம்! சமாதானம்!” போர்க்களத்தில் வேதனையுடன் இப்படி எழுதினாள் அவள்.
ஒரு பள்ளிக் குழந்தை பள்ளியினால் ஏற்படும் கல்வி வளர்ச்சியும், வேடிக்கையும், குதூகலமும் இல்லாமல், விளையாட்டு, நண்பர்கள் சூரியன், பறவைகள், இயற்கை, பழங்கள், சாக்லேட்டுகள், இனிப்புகள் எதுவுமில்லாமல், யுத்தத்தால் கொஞ்சம் கொஞ்சமாய் இழந்த நிரந்தரத் துயரத்தின் அபூர்வப் பதிவு இந்த நாட்குறிப்பு. போரினால் போஸ்னிய மக்கள் இழந்துவிட்ட மொத்தத்தின் சோக குறியீடு இது. அதைவிட மேலாக போர் எதிர்ப்பின் குறியீடு அது. சமாதான ஆசையின் குறியீடு.
சோகத்தோடும் வெறுப்போடும் அவள் தன் எண்ணங்களைப் பதிவு செய்திருக்கும் முறை அபூர்வமானது. அதனுள்ளே துலங்கும் அவருடைய வாழ்வின் மீதான ஆர்வம், வாழ்வின் மேலான நம்பிக்கை ஆகியவை மனித குலத்துக்கு என்றும் தேவைப்படுபவை.
– அனிதா பொன்னீலன்

கலைஞர் எனும் கருணாநிதி
இந்தியப் புரட்சிப் பாதை - சுந்தரய்யா சிந்தனைகள்
எர்ரெர்ரனி தெலங்கானா: ஒரு உரையாடல்
குதர்க்கம் 
Reviews
There are no reviews yet.