Aadhanin Bommai
குறைந்தபட்சம் 3000 ஆண்டுக்கு முந்தைய வரலாற்றைக் கொண்டது தமிழ் மண். கீழடியில் கிடைத்திருக்கும் தொல் எச்சங்கள் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. கீழடி நம் பண்பாட்டின் செழுமையையும் வரலாற்றின் தொன்மையையும் ஒருசேர எடுத்துரைத்துள்ளது. ஆனால், கீழடியைப் பற்றிப் பெரியவர்கள் பேசும் அளவுக்கு குழந்தைகளிடம் நம் வரலாற்றை எடுத்துச் சென்றுள்ளோமா?
மனித இனத்தின் அறிவு வளர்ச்சி முன்னோக்கித்தான் செல்ல வேண்டுமே ஒழிய, சமூக வளர்ச்சியை பின்னோக்கித் தள்ளுவது அறிவுடைமையல்ல. எனவே, நமது மரபின் தொடர்ச்சியை பெரியவர்களிடம் மட்டுமல்லாமல் குழந்தைகள், இளையோரிடமும் பரவலாக எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இருக்கிறது. அந்த வகையில் ‘ஆதனின் பொம்மை` வழியாக நமது வரலாற்றையும் தொன்மையையும் கதை வழியாக அறியத் தந்திருக்கிறார் சிறார் இலக்கியத்தில் தடம் பதித்துள்ள எழுத்தாளர் உதயசங்கர்.

எனக்கு வீடு நண்பர்களுக்கு அறை
எதுவாக இருக்கும்?
அசைந்தபடியே இருக்கிறது தூண்டில்
கனத்தைத் திறக்கும் கருவி
இளையவர்களின் புதுக்கவிதைகள்
மகாநதி 


Reviews
There are no reviews yet.